ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசியாவில் மீண்டும் மிரட்டத் தொடங்கும் கொரோனா.. இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்றா?

இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இந்தியா தனது எண்ணத்தில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற்றும் வேளாண்மைக்கு பாசன நீர் மற்றும் நீர்மின்சக்தியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருக்கும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முகமது அணை கட்டுமானப் பணிகளை 2025ல் திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிக்க சீனா தயாராகி வருகிறது. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரும், கடந்த திங்கள்கிழமை சீனாவுக்குச் சென்று அங்கு அமைச்சகர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, சிந்து நதிநீரை நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்த உதவ முன் வந்திருக்கிறது சீனா. அதற்காகவே முகமது அணையின் கட்டுமானத்தையும் துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தொடங்கியது அட்டாரி - வாகா எல்லை நிகழ்வு... பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?