அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உளவுப் போர் இப்போது ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த முறை அமெரிக்காவின் மிகவும் ரகசிய நிறுவனமான சிஐஏ சீனாவை எதிர்த்துப் போராட ஒரு தனித்துவமான வழியைக் கண்டு பிடித்துள்ளது. ஜின்பிங்கின் கோட்டையில் தனது உளவு வலையமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க டிரம்ப் மிகவும் தனித்துவமான, பொது வழியைக் கையாண்டுள்ளார். சிஐஏ சமூக வலைதளங்களில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இது சீன அதிபர் ஜின்பிங்கின் அதிகாரத்தை அசைக்கக்கூடும்.

இந்த வீடியோக்களில், ''நீங்கள் ஏமாற்றமடைந்தால், பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அமெரிக்கா உங்களுக்கு சிறந்த வாழ்க்கைக்கான வழி'' என சீன அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் தொழில்நுட்ப ரீதியாக புத்திசாலித்தனமானவை மட்டுமல்ல, முக்கிய ரீதியாக மிகவும் கூர்மையானது. துணிச்சலானது.
இந்த வீடியோக்களின் நோக்கம், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அதிருப்தி அடைந்த, பயந்த அதிகாரிகளை அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்திற்காக உளவு பார்க்க ஊக்குவித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை அமெரிக்காவின் சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த சவாலை எதிர்கொள்ள எங்கள் நிறுவனத்திற்கு வேகம், படைப்பாற்றல் மற்றும் தைரியம் தேவை என்று கூறியுள்ளார். ராட்க்ளிஃப், சீன கம்யூனிஸ்ட் கட்சியை அமெரிக்காவின் மிகப்பெரிய முக்கிய தொழில்நுட்ப போட்டியாளராகக் கருதுகிறார்.

இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' நிறுவனத்தை தடுக்கவே பஹல்காம் தாக்குதல்... பாகிஸ்தானை ஏவிய சீனா..!
இந்த இரண்டு வீடியோக்களும் மாண்டரின் மொழியில் வெளியிடப்பட்டு உள்ளன. யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், பேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. "என் விதியைக் கட்டுப்படுத்த நான் ஏன் சியை தொடர்பு கொண்டேன்" என்ற தலைப்பில் முதல் வீடியோ, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பின்னால் இருக்கும் முக்கிய அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அமைவ்துள்ளது. அதிகாரத்தில் ஒரு அதிகாரி தன்னை எவ்வாறு பாதுகாப்பற்றதாகக் கருதுகிறார், தனது குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிஐஏ -வை எப்படி கொள்கிறார் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
选择合作的原因:成为命运的主宰者https://t.co/4BsFttl79P pic.twitter.com/mjA3wPJdzT
— CIA (@CIA) May 1, 2025
இரண்டாவது வீடியோ "ஒரு சிறந்த வாழ்க்கைக்காக நான் ஏன் சிஐஏA-வைத் தொடர்பு கொண்டேன்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இளைம் நிலை ஊழியர்களை குறிவைக்கிறது. இந்த அதிகாரிகள் எப்படி இந்த அமைப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்? எந்த தனிப்பட்ட, தொழில்முறை வளர்ச்சியையும் காணவில்லை என்பதை காட்டுகிறது. "தங்களுக்குத் தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுகிறார். உங்கள் விதி உங்கள் கைகளில் உள்ளது" என்ற உத்வேகமளிக்கும் செய்தியுடன் வீடியோ முடிகிறது.
CIA releases recruiting vids in Mandarin, tells potential turncoats to ‘take the first step’
Offers Chinese officials a path out of ‘hardship and toil’
FLASHBACK: China identified/arrested/executed every CIA spy in country in 2010
Will anyone take the risk? pic.twitter.com/qnaDtfXiD0
— RT (@RT_com) May 1, 2025
இந்த வீடியோக்களின் முடிவில், சிஐஏ லோகோ மற்றும் டார்க் வலையைத் தொடர்புகொள்வது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் சீனாவின் இணைய தணிக்கையை அதாவது 'கிரேட் ஃபயர்வால்' ஐக் கடந்து சரியான நபர்களைச் சென்றடையும் என்று ராட்க்ளிஃப் நம்புகிறார். சீனர்கள் முழுமையான ரகசியமாகப் பேசுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்கா இப்போது டிஜிட்டல் மற்றும் உளவியல் செயல்பாடுகள் மூலம் சீனாவிற்குள் அதன் உளவாளிகளைத் தேடுகிறது.

இந்த வீடியோக்களின் மூலம் அமெரிக்கா சீனாவிற்குள் உள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்பது தெளிவாகிறது. இந்த வீடியோக்கள் தயாரிக்கப்பட்ட விதம், சிஐஏ இப்போது பாரம்பரிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு அப்பால் நகர்ந்து, சமூக ஊடகங்கள், பிரச்சாரம், உணர்ச்சிபூர்வமான செய்திகள் ஆயுதங்களாக இருக்கும் டிஜிட்டல் போர்க்களத்தில் நுழைந்துள்ளது என்பதை உண்ர்த்துகிறது.
இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தானை அழித்துவிடும்... சீனாவால் எதுவும் செய்ய முடியாது... அமெரிக்கா அமைதியாக இருக்கும்..!