தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சகோதரர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பிச்சிருக்கிறாங்க மதுரை மண்ணுல இதே மண்ணில் வந்து இப்பதான் நடத்தி முடித்திருக்கிறார்.
அவர் 24 மணி நேரம் அரசியல் செய்யக்கூடிய ஒரு வேலை இருக்கும் அது ஒரு முழு நேர வேலை ஒரு முதலமைச்சராக அமைச்சராக சட்டமன்ற உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினராக கட்சியினுடைய தலைவராக 24 மணி நேரமும் களத்துல இருக்கணும்.
இன்னைக்கு தமிழக மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக்கு த வெக நான் ஒரு சீரியஸான கட்சி தமிழக மக்களுக்கு ஒரு மாற்றம் தரக்கூடிய கட்சி அவங்க சொல்றாங்க. அப்படின்னா அதே வேகத்தை களத்தில் 24 மணி நேரம் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா?
சனிக்கிழமை மட்டும் நான் பிரச்சாரத்துக்கு வருவேன், சனிக்கிழமை மட்டும் மக்கள பார்ப்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்கள பார்ப்பேன். மற்ற திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி நான் பார்க்க மாட்டேன். அப்படிங்கிறது ஒரு புதிதாக வந்திருக்கக்கூடிய அரசியல் கட்சிக்கு அழகல்ல.
அதற்கான காலம் இன்றைக்கு த வெகாவுக்கு வந்து நாங்கள் திமுகவுக்கு எதிரி அப்படின்னு அவங்க பறைசாற்றுகிறார்கள் அந்த வேகத்தை களத்துல காட்டும் பொழுது மட்டும்தான் மக்கள் நம்புவாங்க.
இன்னைக்கு ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நம்புறாங்க எதிர்பாக்குறாங்கன்னா இன்னைக்கு தலைவர்கள் ஃபுல் டைம் அவைலபில் இருக்காங்க நம்ம எதிர்க்கட்சி தலைவராக இருக்கட்டும் முழு நேரம் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
பாரதி ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் முழுநேர அவைலபில் இருக்கிறார்கள் யார் வேண்டாலும் ஒரு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சந்திக்க முடியும். பாரதி ஜனதா கட்சியினுடைய கூட்டங்கள் பார்த்தீங்கன்னா தினமும் நடக்கும் வெளியிலிருந்து சொல்லுகின்ற கருத்து நாங்க தான் மாற்று நாங்க தான் எல்லாத்துக்கும் மாற்று தமிழகத்திற்கு நாங்க தான் விடிவெள்ளி அவங்க சொல்ல வர்றாங்கன்னா ஏழு நாட்களும் மாசத்துல 31 நாளும் 24 மணி நேரமும் மக்களுக்கு அவைல இருக்கும் பொழுது மட்டும்தான் ஏத்துக்குவோம்.
கட்சியினுடைய தலைவரே நான் மக்களை தான் பார்ப்பேன். நான் திங்களிலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் பார்க்க மாட்டேன் எனக்கூறக்கூடாது. எந்த அளவுக்கு சீரியஸா உங்க அரசியல் களத்தை கையில் எடுப்பீர்கள் என்ற ற கேள்வியை மக்கள் முன்வைக்கிறார்கள்.
அதனால அதையும் பத்திரிக்கை நண்பர்கள் கேட்க வேண்டிய கடமையும் கேள்வியும் உங்களுக்கு இருக்கு. அதையும் நீங்கள் தலைவர்கள் களத்துக்கு வரும்போது கேட்டீங்கன்னு நம்புகிறேன்.
இதையும் படிங்க: பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!