திருமா பற்றி அவதூறாக பேசுவாயா எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி தாக்குதல் நடத்தியதாக திலீபன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர்.ஏர்போர்ட் மூர்த்தி மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயற்பாடு அடாவடித்தனமானது என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கொடுக்கச் சென்ற அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது அதன் வாசலிலேயே வைத்து குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததும், தனியொரு ஆளாக நின்றவர் தற்காத்துக் கொள்ளவே முயன்றார் என்பதுமான காட்சிகள் காணொளிப்பதிவுகளாக ஊடகங்களில் வெளியானபோதும் பொய்வழக்கைப் புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவது அதிகார அத்துமீறலின் உச்சம் என்றும் கூறினார். இது வெளிப்படையான பாசிச வெறியாட்டம் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!!
அதிகாரத்திமிரிலும், பதவிப்போதையிலும் ஆட்டம்போடும் ஆட்சியாளர் பெருமக்களே.,உங்களுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் உங்கள் அரசும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: விசிக நிர்வாகி மீது தாக்குதல்.. இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது..!!