தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில நீண்ட நாளா இருக்குற எல்லைப் பிரச்சினை இப்போ பெரிய மோதலா வெடிச்சு, குறைந்தது 14 பேர் இறந்து போயிருக்காங்கனு சோகமான செய்தி வந்திருக்கு. இந்த மோதல்ல இரு நாட்டு ராணுவங்களும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக்கிட்டு, துப்பாக்கி, ராக்கெட், விமானத் தாக்குதல்கள்னு மோதிக்கிட்டு இருக்காங்க.
இதுல பெரும்பாலான பலி, சாதாரண மக்கள்தான், இது இன்னும் மனசை பதற வைக்குது.இந்த மோதல், தாய்லாந்தோட சுரின், சி சா கெட், உபோன் ரட்சதானி மாகாணங்களுக்கு அருகில உள்ள பிரசத் தா முவான் தோம் கோயில் பகுதியில ஆரம்பிச்சது. இந்த 12-ம் நூற்றாண்டு கோயில், இரு நாடுகளுக்கும் இடையில எல்லையில இருக்கு, ஆனா இதோட உரிமை யாருனு நூறு வருஷமா சண்டை.
1907-ல பிரெஞ்சு காலனி ஆட்சியின்போது வரையப்பட்ட எல்லை வரைபடம் இதுக்கு முக்கிய காரணமா சொல்லப்படுது. 2008-ல கம்போடியா இந்த கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமா பதிவு செய்ய முயற்சி பண்ணபோது, தாய்லாந்து கடுமையா எதிர்த்து, அப்போ இருந்து இந்த சண்டை தொடருது.
இதையும் படிங்க: 80,000 ஆபாச வீடியோ!! புத்த துறவிகளின் காம களியாட்டம்!! 100 கோடி கொடுத்து இளம்பெண்ணிடம் உல்லாசம்!!
2011-ல இதே மாதிரி ஒரு மோதல்ல 20 பேர் இறந்தது இன்னும் மறக்கல. இந்த முறை, மே மாசத்துல ஒரு கம்போடிய ராணுவ வீரர் இறந்தது, புது வெடிகுண்டு வெடிப்புல தாய் வீரர்கள் காயமடைஞ்சது இதுக்கு காரணமா சொல்லப்படுது. ஜூலை 24 காலையில, கம்போடியா ட்ரோன் பறக்கவிட்டு, தாய் ராணுவத்தை உளவு பார்த்ததா தாய்லாந்து குற்றம் சாட்டுது.

கம்போடியாவோ, தாய் வீரர்கள் முதல்ல கோயில் பகுதியில நுழைஞ்சு தாக்கினாங்கனு சொல்றாங்க. இதனால, இரு பக்கமும் துப்பாக்கி, BM-21 ராக்கெட், மோர்ட்டார் குண்டுகள் பயன்படுத்தி மோதல் தீவிரமாச்சு. தாய்லாந்து, F-16 விமானத்தை பயன்படுத்தி கம்போடியாவோட இரண்டு ராணுவ இலக்குகளை தாக்கியிருக்கு.
கம்போடியாவோ, இதை “பயங்கரமான ஆக்கிரமிப்பு”னு கண்டிச்சிருக்கு. தாய்லாந்து பக்கம், 14 பேர் இறந்திருக்காங்க, இதுல 13 பேர் சாதாரண மக்கள், ஒரு வீரர். ஒரு 8 வயசு பையனும் இறந்திருக்கானு தாய் சுகாதார அமைச்சர் சோம்சாக் தெப்சுதின் சொல்றார். 32 பொதுமக்கள், 14 வீரர்கள் காயமடைஞ்சிருக்காங்க. கம்போடியா பக்கம் ஒருவர் இறந்ததா தகவல் இருக்கு.
தாய்லாந்து, கம்போடியா ஒரு மருத்துவமனையை தாக்கியதா குற்றம் சாட்டி, இதை “போர் குற்றம்”னு சொல்லியிருக்கு. இரு நாடுகளும் எல்லையை மூடி, தாய்லாந்து 1,38,000 பேரையும், கம்போடியா 20,000 பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருக்கு.
கம்போடிய பிரதமர் ஹுன் மேனட், ஐநா பாதுகாப்பு சபையை அவசர கூட்டத்துக்கு அழைச்சிருக்கார். தாய்லாந்து தற்காலிக பிரதமர் பூம்தம் வெச்சயாச்சை, “முதல்ல மோதல் நிறுத்தப்படணும், அப்புறம்தான் பேச்சுவார்த்தை”னு சொல்லியிருக்கார்.
இதையும் படிங்க: இப்படிலாமா போன்ல பேசுவீங்க! வெளியான பர்சனல் ஆடியோ! தாய்லாந்து பெண் பிரதமருக்கு பேச்சால் கொந்தளிப்பு!