தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு அமைத்த தனிநபர் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படும் என்றும் எனவே சிபிஐ விசாரணைக்கு கரூர் சம்பவம் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: கரூரில் தொங்கியபடி மக்களைக் காப்பாற்றிய தொண்டர்... வெளியாகும் அடுத்தடுத்த வீடியோ காட்சிகள்...!
கட்சிக் கூட்டங்களுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க கோரிய மனு முதலில் விசாரிக்கப்பட்டு வருகிறது . ஒவ்வொரு மனுக்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். என்னென்ன மனுக்கள் என அரசு தரப்பில் தற்போது விளக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இதவிடவா பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகுது? விஜய் கரூர் செல்லாதது குறித்து கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்...!