2026 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக சந்திக்க இருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சுற்றுப்பயணங்களை முன்கூட்டியே தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களை அணுகி மக்களிடம் தங்களது வாக்குறுதிகளையும், அதிமுக சாதனைகளையும், திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலங்களையும் எடுத்துக் கூறி வருகிறார்.
தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கூட்டணிக்கான அழைப்பும் விடுத்தார். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க முக்கிய பிரச்சனையாக உட்க்கட்சி பிரச்சனையே உருவெடுத்துள்ளது. அதிமுகவிற்கு கெடு விதித்த செங்கோட்டையன் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையில், செங்கோட்டையன் சமீபத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சென்று மரியாதை செலுத்தினார். அது மட்டுமல்லாமல் சசிகலாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் தாமதம் ஏன்? என்ன நடக்குது முதல்வரே..? சந்தேகத்தை கிளப்பும் இபிஎஸ்..!
உட்கட்சி பிரச்சனை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல அது வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் பிரிவு உண்மையான அதிமுகவே இல்ல... குண்டை தூக்கி போட்ட செங்கோட்டையன்! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்...!