• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செஞ்சி சிறுமி எங்கே?... தாயிடம் டஜன் கணக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள்... சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த திடுக் தகவல்கள்...!

    வீட்டின் மாடிக்குச் சென்ற போலீசார், அங்கிருந்து சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    Author By Amaravathi Sat, 24 Oct 2026 07:54:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gingee girl missing cbcid enquiry

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் வசித்து வரும் வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் ஏழு வயது மகள் ஹேமலதா, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்துத் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, ஹேமலதாவைக் காணவில்லை.

    சிறுமியைப் பல்வேறு இடங்களில் பெற்றோரும் உறவினர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. சிறுமியைக் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்தத் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதுடன், சிறுமியை உயிருடன் மீட்பதற்காகக் காடு, மலை, குளம், ஏரி போன்ற பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    10 நாட்களாகத் தேடியும் சிறுமியைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சிறுமி உயிருடன் இருக்கிறாரா, எங்கு இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் பெற்றோரும் உறவினர்களும் மட்டுமின்றி, அந்தக் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கிய சிறுமி காணாமல் போன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதா?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு எஸ்.பி. கொடுத்த பதில்...!

    இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றம் செய்து, நேற்று முன்தினம் இரவு தமிழகக் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். உடனடியாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாகச் சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    இவர்கள் நேற்று காலை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி காவல் அலுவலகத்துக்கு வந்தனர். சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகவும், இதுவரை உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது.

    அதன் பிறகு, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவகர், துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா, ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய போலீசார் விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, நேற்று மதியம் ஒரு மணியளவில் ஆலம்பூண்டியில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர்.

    அங்கு சிறுமியின் உறவினர்கள் மற்றும் தாய் பவானியிடம் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து, சிறுமி ஹேமலதாவுக்கு கடந்த 11-ஆம் தேதி மாலையில் எந்த நேரத்தில் பிறந்தநாள் விழா தொடங்கி, எப்போது முடிந்தது, சிறுமியை வாழ்த்துவதற்காக அக்கம் பக்கத்தினர் யாரெல்லாம் வந்தனர், உறவினர்கள் யார் யார் வந்தனர், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அன்று இரவு எத்தனை மணிக்குச் சிறுமி தூங்கினார் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.

    மேலும் தொடர்ந்து சிறுமியின் அருகில் யார் யார் படுத்துத் தூங்கினர், எத்தனை மணிக்கு எழுந்து பார்த்தீர்கள், சிறுமி வீட்டில் இல்லாததை முதலில் யாரிடம் தெரிவித்தீர்கள், சத்தியமங்கலம் போலீசாரிடம் எப்போது புகார் அளித்தீர்கள் எனப் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டு விசாரணை நடத்தினர். தாய் பவானி அளித்த பதில்களையும் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துகொண்டனர்.

    பின்னர், சம்பவத்தன்று போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி சென்ற பாதையைச் சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல், வீட்டின் மாடிக்குச் சென்ற போலீசார், அங்கிருந்து சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும், சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி அழும் சத்தம் கேட்டதாக எதிர்வீட்டில் வசித்து வரும் மஞ்சுளா ஏற்கெனவே சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், சிபிசிஐடி அதிகாரிகள் அங்கிருந்து விழுப்புரத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

    இதனிடையே, ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று, சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பெற்றுச் சென்றனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில், சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகச் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட மறுநாளே அவர்கள் அதிரடியாக விசாரணையைத் தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: சிறுமி மாயமான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... தாயிடம் காத்திருக்கும் கிளைமேக்ஸ்... புது ட்விஸ்ட் எடுத்த போலீஸ்...!

    மேலும் படிங்க
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share