காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இருநாடுகளுமே ராணுவத்தை தயார் செய்து வருகிறார்கள். இதில் எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது எனப் பார்க்கலாம்.

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி தர தயாராகி வருகிறது. இதற்காக முப்படைகளும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு... மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு!!
பாகிஸ்தான் அமைச்சர் அடாலுல்லா தரார் கூறுகையில் “இந்தியாவிடம் இருந்து அடுத்த 36 மணி நேரத்துக்குள் தாக்குதல் நடத்தப்படலாம்” என எச்சரித்தார். சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், “இந்தியா என்ன செய்தாலும் அதற்கு தகுந்த பதிலடியை பாகிஸ்தான் தரும்” எனத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் ராணுவ பலத்தில் எந்த நாடு வலிமையாக இருக்கிறது என்பதை சர்வதேச புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராணுவ தரவரிசை!
சர்வதேச ராணுவத் தரவரிசைப் பட்டியலில் 145 நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது. ராணுவ பலத்தின் அடிப்படையில் இந்தியா 2வது நிலையிலும், பாகிஸ்தான் 3வது நிலையிலும் இருக்கிகறது.
பட்ஜெட் ஒதுக்கீடு!
ராணுவத்துக்கு ஒதுக்கும் பட்ஜெட்டிலும் ராணுவத்தின் பலத்தை அறியலாம். மத்திய அரசு ராணுவத்தாக 2025 பட்ஜெட்டில் ரூ.6.80 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது, இதில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக மட்டுமே ரூ.1.80 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது, பட்ஜெட்டில் 13.45 சதவீதம் ராணுவத்துக்கா செலவிடப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது பட்ஜெட்டில் 1.7 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது. கடந்த பட்ஜெட்டில் பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு ரூ.2.12 லட்சம்கோடி ஒதுக்கியது. பாகிஸ்தான் ஒதுக்கியதைவிட 9 மடங்கு கூடுதலாக இந்தியா ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது. ஸ்டாக்ஹோம் அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் உலகளவில் ராணுவத்துக்கு செலவிடும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது.

ராணுவ வீரர்கள் பலம்!
இந்திய ராணுவத்திடம் 51.37 லட்சம் வீரர்கள் உள்ளனர், இதில் 14 லட்சம் பேர் தயாராக இருக்கிறார்கள். பாகிஸ்தானில் ஏறக்குறைய 17 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் இதில் 6.7 லட்சம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்.
விமானப்படை, கடற்படை!
இந்தியாவிடம் 2229 போர் விமானங்கள் இருக்கும் நிலையில் இதில் 1672 விமானங்கள் போரில் ஈடுபடத் தயாராக இருக்கின்றன. இதில் 513 போர் விமானங்கள், 130 விமானங்கள் எதிரிகளை அழிக்கும் விமானங்கள்.270 போக்குவரத்து விமானங்களும், 74 சிறப்பு விமானங்களும் 899 ஹெலிகாப்டர்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் 1399 விமானங்களும், இதில் 797 விமானங்கள் போரிடத் தயாராக உள்ளன. போர் விமானங்கள் 328 இருந்தாலும் அதில் 90 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 64 போக்குவரத்து விமானங்களும், 27 சிறப்பு விமானங்களும் பாகிஸ்தானிடம் உள்ளன. 373 ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் வைத்துள்ளது. கடற்படையைப் பொருத்தவரை இந்தியாவிடம் 292 கப்பல்களும், இதில் 2 விமானம் தாங்கி போர்கப்பல்கள், 13 எதிரிஇலக்குகளை அழிக்கும் கப்பல்கள், 14 போர் கப்பல்கள், 135 கண்காணிப்பு படகுகள், 18 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.

பாகிஸ்தானிடம் 121 மட்டுமே இருக்கிறது, 69 கண்காணிப்பு படகுகலும், 8 நீர்மூழ்கி கப்பல்களும், 3 போர் கப்பல்களும் உள்ளன. விமானம் தாக்கி கப்பல்கள் இல்லை என குலோபல் ஃபயர்பவர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய பாதுகாப்புக்கான ஆலோசனைக் குழு மாற்றம்.. வெளியானது மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!