ரஷ்யாவிடம் எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா மீது மேலும் கூடுதலாக வரிவிதிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவரது முயற்சிகள் எதுவும் ரஷ்ய அதிபர் புதினிடம் எடுபடாததால் அவரது ஆத்திரம் ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா மீது திரும்பியுள்ளது. இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் தான், பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யாவால் உக்ரைன் உடன் போரைத் தொடர்கிறது. உக்ரைனில் கொலை செய்யப்படுவோர் குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை என கடுமையாக விமர்சித்த டிரம்ப், இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க உள்ளதாக அறிவித்தார். அத்துடன் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாது அந்த எண்ணையில் பெரும் பகுதியை வெளிச்சந்தையில் விற்பனை செய்து இந்தியா கொள்ளை லாபம் ஈட்டுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இதனை இந்தியா தீட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை குறி வைப்பதாக வெளியிரவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீப் ஜெயஸ்வால் அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டி உள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் டார்க்கெட் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்றும், பகுத்தறிவு இல்லாத செயல் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா! மவுசு குறையாத பிரதமரின் நிகழ்ச்சி... கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ஆச்சரியம்!
இந்தியாவை குற்றப்படுத்தும் நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் தான் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்ஷ்வால், பல்லேடியம் உலோகத்தையும் அணுசக்தி துறைக்கு தேவையான யுரேனியம் எக்ஸாஃப்ளோரைடு ரஷ்யாவிடமிருந்துதான் அமெரிக்கா வாங்குவதாக தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்... வழக்கறிஞரை தட்டி தூக்கிய போலீஸ்!