பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பயங்கரவாதிகளைக் கொன்ற பிறகு, இந்திய ராணுவம் பாகிதானுக்கு மற்றொரு மரண அடியைக் கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் தகவல்படி, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, இந்திய விமானப்படை வீரர்கள் அந்நாட்டின் அணைக்கட்டுக்களை அழித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 9 இடங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, இந்திய ராணுவ வீரர்கள் நீலம் நதியின் நௌசேரி அணையில் குண்டுகளை வீசினர். குண்டுவெடிப்பு காரணமாக அணை சேதமடைந்துள்ளது. நௌசேரி அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, பிற்பகல் 2 மணியளவில் நௌசேரி அணையின் மீது குண்டு வீசப்பட்டதாகவும், இதனால் அணை சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது. இது சர்வதேச சட்டங்களை மீறுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதையும் படிங்க: என் குடும்பமே போச்சு.. நானும் போயிருக்கனும்; கதறும் மசூத் அசார்!!
இதற்கு இந்தியா இன்னும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. நீலம் பள்ளத்தாக்கு இந்திய எல்லையிலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் நீலம் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். முசாபராபாத், சியால்கோட் பகுதிகளில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. பயங்கரவாத முகாம்கள் இருந்த அதே பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.

ஜெய்ஷ்-இ-முகமதுவின் 4 முகாம்களையும், லஷ்கர்-இ-தொய்பாவின் 3 முகாம்களையும், ஹிஸ்புல் முஜாஹிதீனின் 2 முகாம்களையும் இந்தியா அழித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகி வந்தன.

பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவது இது முதல் முறையல்ல. 2016-ல் யூரி தாக்குதலுக்கும், 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கும் பிறகு இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.யூரி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 250 பயங்கரவாதிகளும், பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் 300 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இரண்டு தாக்குதல்களுக்குப் பிறகும், பாகிஸ்தான் பின்வாங்கியது.
இதையும் படிங்க: துப்பாக்கி ஏந்தி யுத்த களத்தில் சண்டையிட தயார்.. பரபரப்பை கிளப்பிய ராஜேந்திர பாலாஜி!!