காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாத முகாம்களின் படங்கள் வெளியீடு..! அம்பலமானது பஹல்காம் தாக்குதலில் பாக். பங்கு..!

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது குடும்பத்தை அழித்து விட்டதாக ஜெய் முகமது அமைப்பின் தலைவரான மஸ்ஜித் அசார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிரவு, எனது குடும்பத்தில் இருந்து 10 பேர் ஒரே நேரத்தில் ஜன்னத்தில் செல்வதற்கான பேறு பெற்றனர். ஐந்து குறும்புக் குழந்தைகள் ஜன்னத்துல் பிர்தௌஸின் மலர்களாகியுள்ளனர்.
என் வாழ்விற்கும் மேலான என் மூத்த சகோதரி சாஹிபா, அவரது கணவர், என் மருமகன் அலிம் ஃபாசில், அவரது மனைவி, எனது அன்பான உறவினர் அலாம் ஃபாஸிலா. எங்கள் மருமகன் மற்றும் அவரது மனைவி இறைவனுக்கு ப்ரியமானவர்கள் ஆகிவிட்டனர். மோடி, 5 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது குறிவைத்து தாக்கினார். இந்த துயரம் மற்றும் அதிர்ச்சி எனக்கு தாங்க முடியாதது. ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, எந்த விரக்தியும் இல்லை, எந்த பயமும் இல்லை.

என் மனதில் மீண்டும் மீண்டும் வருவது என்னவென்றால், நான் கூட இந்த 14 பேரில் ஒருவராக இருக்க வேண்டும். ஆனால், இறைவனை சந்திக்கும் நேரம் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டது, அது ஒரு நொடி கூட முன்போ அல்லது பின்போ வராது. எங்கள் வீட்டில் இருந்த நான்கு குழந்தைகளும் - அவர்களின் வயது 7 முதல் 3 வரை - ஒரே நேரத்தில் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு மரணம் கிடைக்கவில்லை, உயிர்தான் கிடைத்துள்ளது.
குரான் கூறுகிறது, "மரணத்தை அல்லாஹ் நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் (இறப்பின் போதும் பரலோக வாழ்வில்) கிடைக்கும். இந்த கொடூரம் அவர்களுக்கு செல்ல வேண்டும் என்று இறைவன் நிச்சயித்த நேரம்தான். ஆனால் அவர்களுக்கு வாழ்வு கிடைத்துள்ளது, மரணம் அல்ல. இப்போது மோடியின் இந்த கொடூரம் அனைத்து சாந்தி வழிகளை முறித்துவிட்டது. இனி எவரும் கருணைக்கு ஏதுவாக நம்பிக்கையை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ஆபரேஷன் சிந்தூர்": ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!