காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் அரசு அதிகாலை 2 மணிக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதையும் படிங்க: 2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பாகப் பல்வேறு செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக பாகிஸ்தானில் நுழைய முயன்ற நான்கு இந்திய ரஃபேல் போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தியதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் வெளியிடவில்லை. அதேபோல பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இன்னும் சில செய்தி ஊடகங்களில் பீம்பர் மற்றும் கோட்லி செக்டார்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மேலே பறந்து கொண்டிருந்த ஆளில்லா இந்திய டிரோன்கள் இரண்டை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகச் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்குத் தீர்மானமான பதிலடி கொடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருந்த நிலையில், இதுபோன்ற செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இதுக்கும் தடையா..? அடி மேல் அடி கொடுக்கும் இந்தியா.. திணறும் பாகிஸ்தான்..!