நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சோசியல் மீடியாக்களுக்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் கொதித்துப் போன நேபாள இளைஞர்கள் 'ஜெனரல் இசட் புரட்சி' என்ற பெயரில் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தலைநகர் காத்மாண்டல் மிகப்பெரிய போராட்டம் உருவானது. பார்லிமெண்டுக்குள் ஊடுருவ பார்த்தனர். ஒரு கட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்கு தீ வைக்க ஆரம்பித்தனர். கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடுக்கு பிறகும் கலவரத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
நேற்றிரவே சமூக வலைத்தளங்கள் மீதான தடையை அரசு நீக்கி இருந்தாலும், இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு பொறுப்பேற்று ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். ஆனாலும் போராட்டம் கட்டுப்படவில்லை. பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ராம் சந்தி பவுடல், அமைச்சர் பிரித்வி சுபா, உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேலாக் உள்ளிட்ட பல தலைவர்கள் வீடுகள் தீக்கிரையாகின. பல கட்சி தலைவர்களின் வீடுகளை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்காங்கே கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு! அதிர வைக்கும் அடுத்தடுத்த கைது... போலீஸ் அதிரடி
வேறு வழியில்லாமல் போராட்டக்காரர்களுக்கு பிரதமர் பணிந்தார். அவரை பதவி விலகும்படி ராணுவமும் கேட்டுக்கொண்டது. இதை எடுத்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். நிலைமை எல்லை மீறி போனதால் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாட்டை விட்டு தப்பி ஓட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாய் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரம் உலகையே அதிர செய்தது. அதே பாணியில் தான் இப்போது நேபாளத்திலும் இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து அடைக்களம் புகுந்தார். அதே பாணியில் தான் கேபி சர்மா ஒலியும் தப்பி செல்கிறார். நேபாளத்தில் கட்டுக்கடங்காமல் நடக்கும் கலவரம் காத்மாண்டுவை தாண்டி மற்ற இடங்களுக்கும் பரவியதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே நேபாளத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.1,500 கோடி நிவாரண நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு..!