பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கிறது, இரு நாடுகளும் முடிந்தவரை பொறுமைகாக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகள், தீவிரவாதிகள் முகாம்கள், உள்கட்டமைப்புகள், பயிற்சிக் கூடங்கள் என 9 இடங்களை இந்திய ராணுவம் குண்டுவீசி தாக்கி அழித்தது. இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல ஆதரவும், பாராட்டும் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?
இந்நிலையில் இந்தியாவின் ராணுவத் தாக்குதல் வருத்தமளிக்கிறது என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் சூழல் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இருவருமே எப்போதுமே அண்டைநாடுகள். இரு நாடுகளுமே சீனாவின் நெருங்கிய நாடுகள். சீனாவைப் பொருத்தவரை தீவிரவாதவாதம் எந்த வழியில் வந்தாலும், உருவமெடுத்துவந்தாலும் அதை தீவிரமாக எதிர்க்கிறோம். பஹல்காம் தீவிரவாத தாக்குதலையும் கண்டிக்கிறோம்.
இரு நாடுகளும் நீண்டகாலத்தில் அமைதி, நிலைத்தன்மை, பிராந்தியத்தில் அமைதியான சூழல் ஆகியவற்றை கொண்டு வரும் நோக்கில் கட்டுப்பாட்டுடனும், பொறுமையாகவும் நடந்து கொண்டு, சூழலை மேலும் சிக்கலாக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா இன்று அதிகாலை நடத்திய ராணுவத் தாக்குதல் சீனாவுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. இந்தியா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியதில் இருந்து பாகிஸ்தானும், சீனாவும் தங்களின் ராஜாங்கரீதியான உறவுகளை ஆழப்படுத்தின.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷ்காக் தார், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி- தொடர்பு கொண்டு சூழலை கடந்த மாதம் 27ம் தேதி விளக்கினார். பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங் ஜாய்டாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் அசிப் அலி ஜர்தாரியையும் சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தான் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், 4 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். சோவிய்யூனியன் 2ம்உலகப் போரில் வென்ற 80-வது நினைவு தினத்தைக் கொண்டாட சீன அதிபர் ரஷ்யா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுக்கு நூறாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்கர்கள்..! அலறும் தீவிரவாதிகள்..!