கொலோன் பல்கலைக்கழகம் (University of Cologne), ஜெர்மனியின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1388-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், ஐரோப்பாவில் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவான தகவல்கள், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் பரப்புவதற்கு ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள், தெற்காசியவியல் துறையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை பார்வையிட்டனர். இதனிடையே, பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை திமுக அரசு வழங்கியதாக கூறினார். அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழ் ஆர்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்ததாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: NO DOUBT... டிடிவி தினகரன் எங்க கூட்டணியில தான் இருக்காரு... நயினார் பளிச் பதில்
சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த நிகழ்வு அமைந்ததாக கூறினார்.
இதையும் படிங்க: எங்களோடது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா? மோடி வெள்ளை அறிக்கை விடட்டும்! விளாசிய செல்வப்பெருந்தகை..!