கே.பி. சர்மா ஒலி 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி நேபாளத்தின் தேர்ஹாதும் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது அரசியல் வாழ்க்கை 1970களில் தொடங்கியது, அப்போது அவர் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். நேபாளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கிய பங்கு வகித்தன.
ஒலி, குறிப்பாக மன்னராட்சிக்கு எதிரான நேபாளத்தின் மக்களாட்சி இயக்கத்தில் தனது பங்களிப்பை வழங்கினார். 2008 இல் நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு அமைக்கப்பட்டது, இதில் ஒலியின் கட்சி முக்கிய பங்கு வகித்தது. இதனிடையே, சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக காத்மாண்டுவில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டங்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவை. இந்த போராட்டம் வன்முறையாக மாறின. நேபாளத்தில் அரசின் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட போதிலும் போராட்டம் வெடித்தது. அமைச்சர்கள் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் நேபாள நாடாளுமன்றத்தை தீ வைத்து கொளுத்தினர்.
இதையும் படிங்க: நாட்டையே கொளுத்திய GEN-Z தலைமுறை... பற்றி எரியும் நேபாள நாடாளுமன்றம்
ஏற்கெனவே, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் பதவி விலகலை தொடர்ந்து பிரதமரும் ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதமர் கே. பி. சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்கள் போராட்டத்திற்கு பணிந்த நேபாள அரசு.. தடையை நீக்கி அதிரடி உத்தரவு..!!