பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் இப்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் உள்ள TTP (தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்) உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் பதிலடி கொடுத்து ஆப்கன் எல்லைக்குள் புகுந்து குண்டுவீசியது. இதனால் கோபமடைந்த தலிபான் ராணுவம் பெரும் தாக்குதலை தொடங்கியது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "தலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் எங்கள் பொறுமை இழந்துவிட்டது. இப்போது நேரடிப் போர் நடத்துவோம்" என்று 'ஓப்பன் வார்' அறிவித்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் காபூல், கந்தஹார், பக்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சரமாரியாக குண்டு வீசின.
பாகிஸ்தான் தரப்பு 297 தலிபான் போராளிகளை கொன்றதாகவும், இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறியது. ஆப்கான் தரப்பு 55 பாக் வீரர்களை கொன்றதாகவும், பல ராணுவ நிலைகளை கைப்பற்றியதாகவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: பாக்., இதயப்பகுதியை சுக்குநூறாக்கிய தலிபான்!! 200KM உள்ளே புகுந்து மரண அடி!! இஸ்லாமாபாத் காலி?!

இதற்கு பதிலடியாக தலிபான் ஆப்கான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் ஆழமான பகுதிகளை தாக்கியது. இஸ்லாமாபாத் வரை சென்று ஃபைசலாபாத், நவ்ஷேரா ராணுவ கன்டோன்மென்ட், ஜம்ருட் ராணுவ தளம், அப்போடாபாத் உள்ளிட்ட இடங்களில் குண்டு வீசியது.
தலிபான் "அல்லாவின் பெயரால் வெற்றி பெற்றோம். இஸ்லாமாபாத் வரை வான்வழி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினோம்" என்று அறிக்கை வெளியிட்டது. பாகிஸ்தான் இந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், உயிரிழப்பு இல்லை எனவும் கூறியது.
இந்த ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்துள்ளது. எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி உள்நாட்டு நகரங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆப்கான் தலிபான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த மோதல் மத்திய ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. போர் தொடர்ந்தால் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: பாக்., இதயப்பகுதியை சுக்குநூறாக்கிய தலிபான்!! 200KM உள்ளே புகுந்து மரண அடி!! இஸ்லாமாபாத் காலி?!