இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. முன்னணி பலுச் தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான மிர் யார் பலுச் பாகிஸ்தான் அரசு 40-க்கும் மேற்பட்ட மசூதிகளை இடித்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானிடமிருந்து பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வரும் பலுச் அமைப்புகள், பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மசூதிகளை இந்தியா கண்காணிப்பதாக பாகிஸ்தான் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிர் யார் பலுச் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: "பாகிஸ்தான் அரசு தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதிகளை இடித்து வருகிறது. இதுவரை 40 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. மசூதிகள் மீது நேரடியாக குண்டு வீசுவது, குர்ஆன் பிரதிகளை எரிப்பது, மசூதி தலைவர்களை கடத்துவது போன்ற கொடூர செயல்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் கைகுலுக்கும் சீனா! இந்தியாவுக்கு தான் பேராபத்து! பலூச் தலைவர் அவசர கடிதம்!

சொந்த நாட்டில் உள்ள மசூதிகளை அழித்துக் கொண்டு இந்தியாவுக்கு பாடம் எடுக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானை ஆக்கிரமித்தபோது கலாட் மன்னரின் மசூதி மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. அந்த அடையாளங்கள் இன்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கும் இஸ்லாமிய விரோத போக்குக்கும் சாட்சியாக உள்ளன.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒடுக்க ஜிகாதி அமைப்புகளை கருவியாக பயன்படுத்தி வருகிறது."
இந்த குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC), சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலேயே மசூதிகள் இடிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் மக்களின் போராட்டம் மீண்டும் சர்வதேச அரங்கில் எழுப்பப்படும் நிலையில், பாகிஸ்தான் அரசு இதற்கு என்ன பதில் அளிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: சொந்தமா 3 வீடு 1 காரு இருக்கு! வாடகைக்கு 3 ஆட்டோ ஓடுது!! இந்தூரில் சிக்கினார் கோடீஸ்வர பிச்சைக்காரர்!