பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் ராணுவம் பதிலடி கொடுத்தது. நம் படையை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கியதால் போர் நிறுத்தம் உருவானது. இப்போது ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை எடுத்த காரணம் குறித்தும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்காக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
உலக நாடுகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. உலக நாடுகளிடம் சென்று நடந்த்தை உள்ளபடி எடுத்துக் கூறினர். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு அளிப்பதற்கான தெளிவான ஆதாரங்களுடன் நம் எம்பிக்கள் விளக்கம் அளிப்பதால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 12 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு!! இந்தியாவுக்கு ஆப்பா? கட் & ரைட்டாக பேசிய அதிபர் ட்ரம்ப்!
செய்தி நிறுவனத்துக்கு பேட்டிஅளித்த அவரிடம், இந்தியாவுடன் நல்ல உறவை கடைபிடிக்கும் விதமாக, லஷ்கரே தொய்பா தலைவர் ஹபீஸ் சையத், ஜெய்ஷி முகமது இயக்க தலைவர் மசூர் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. பதில் அளித்த பிலாவல் பூட்டோ ஜர்தாரி, ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில்தான் இருக்கிறார். மசூத் அசாரை கைது செய்ய முடியவில்லை. ஆப்கனில் இருப்பதாக நம்புகிறோம்.

நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்களை சமர்பித்தால் ஹபீஸ் சையத், மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க இந்திய மறுக்கிறது என்று பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறினார். பதவியில் இருந்தபோது, பூட்டோ இதுபோல் பேசியது இல்லை. இப்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில் ஞானோதயம் வந்தது போல பேட்டி கொடுத்துள்ளார்.

பிலாவல் பூட்டோ பேச்சு பற்றி சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வரும் பாகிஸ்தான், திடீரென, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார் என கூறியுள்ளது இந்திய எம்பிக்களின் வெளிநாட்டு பயணம், ஆபரேஷன் சிந்துார் பற்றி அங்கு அவர்கள் தரும் விளக்கம் உலக நாடுகள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், பாகிஸ்தான் திடீரென யு டர்ன் அடித்துள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டார்ட் ஆகாத போர் விமானத்தால் பெரும் அவமானத்தில் பிரிட்டன்.. ரகசியங்கள் கசிந்தால் அம்போ தான்!!