பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது.
'ஆபரேஷன் சிந்தூர்' ரகசிய திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 90 ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாகிஸ்தான் அரசை நிலைகுலைய வைத்துள்ளது. 
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் ராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளிவந்த கசிந்த மருத்துவமனைக் குறிப்பின்படி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 'மூல நோய்' இருப்பது கண்டறியப்பட்டது. ரகசியமாகக் கூறப்படும் இந்த ஆவணம், ஏப்ரல் 27 முதல் பிரதமர் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறுகிறது.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் தாக்குதல் அப்பட்டமான போர் செயல்’.. பதிலடி தருவோம்..! கதறும் பாகிஸ்தான்..!
ஷெரீப்பின் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரம் புருவங்களை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் உலக நாடுகள், உள்நாட்டு மக்களால் பாகிஸ்தான் தலைமைக்குள் அதிகரித்து வரும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா மூலம் சிக்கல்கள் ஏற்படலாம் என பாகிஸ்தான் கருதுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது பல்வேறு வியூகங்களை கிளப்பி உள்ளது. பிரதமரின் உடல்நிலையை ரகசியமாக வைத்திருக்குமாறு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் நிலைப்பாடு, கடும் நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் கட்நத 5 நாட்களுக்கு முன்னால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மீண்டும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷபாஸ் ஷெரிப்புக்கு உள் மூலமா? வெளிமூலமா எனக் கேட்டால் இரண்டும்தான் என்கிறார்கள். பாகிஸ்தான் உள் நாட்டு பிரச்னையால் உள்மூலமும், இந்தியாவால் ஏற்பட்ட பிரச்னைகளால் வெளி மூலமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: உங்களைவிட இந்தியாவே சிறந்தது..! பாகிஸ்தானுக்கு எதிராக மக்களை திரட்டும் லால் மசூதி மௌலானா..!