பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் கடந்த 2025 செப்டம்பர் 17-ஆம் தேதி ரியாத்தில் 'ஸ்ட்ராடெஜிக் மியூச்சுவல் டிஃபென்ஸ் அக்ரீமெண்ட்' (Strategic Mutual Defence Agreement) என்ற பெயரில் ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதில், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் அது இரு நாடுகளின் மீதும் நடத்தியதாக கருதப்படும் என்ற கூட்டு பாதுகாப்பு விதி (collective defense clause) இடம்பெற்றுள்ளது. இது நேட்டோவின் Article 5-ஐ ஒத்தது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் அணு ஆயுத திறனை சவுதிக்கு வழங்கும் வகையில் (nuclear umbrella) விளக்கப்பட்டது, இருப்பினும் பின்னர் சில தெளிவின்மைகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, பிற முஸ்லிம் நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) கூறுகையில், "முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? பியூஷ் கோயலுடன் சந்திப்பா? பிரேமலதா விஜயகாந்த் பிரஸ் மீட்..!
அரசியல் அல்லது ராணுவ ரீதியாக பலவீனமடைவதை தவிர்க்க, முஸ்லிம் நாடுகள் ஒரு விரிவான பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். முஸ்லிம் உலகம் பிரிந்து கிடப்பதால் உள்ள ஸ்ட்ராடெஜிக் பலவீனத்தை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற கூட்டு பாதுகாப்பு அமைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.
தற்போது, இந்த ஒப்பந்தத்தில் துருக்கியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ரஜா ஹயாத் ஹர்ராஜ் கூறியதாவது, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே ஒரு டிராஃப்ட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட ஒரு வருட கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவாகியுள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது 'இஸ்லாமிய நேட்டோ' (Islamic NATO) என்று அழைக்கப்படும் ஒரு புதிய பாதுகாப்பு கூட்டமைப்பாக வளர்ச்சி பெறலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சவுதியின் பொருளாதார வலிமை, பாகிஸ்தானின் அணு ஆயுத திறன், துருக்கியின் நவீன ராணுவ தொழில்நுட்பம் ஆகியவை இணைந்தால், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா போன்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் இதை ஒரு தற்காப்பு அமைப்பாகவே வலியுறுத்தி வருகிறது, ஆக்ரெஸிவ் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த முயற்சி முஸ்லிம் உலகின் ஒற்றுமையை வலுப்படுத்தும் அதே வேளையில், புதிய பிராந்திய பதட்டங்களை உருவாக்கும் அபாயமும் உள்ளது. துருக்கி இணைவது உறுதியானால், இது மூன்று நாடுகள் கொண்ட டிரைலேட்ரல் பிளாக்காக மாறும். மேலும் நாடுகள் (எகிப்து, இந்தோனேஷியா போன்றவை) இணைய வாய்ப்பும் உள்ளது.
இந்த வளர்ச்சி உலக அரசியலில் பலதுருவ உலக ஒழுங்கை (multipolar world) மேலும் வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு வாங்க வேற வழி இருக்கா?!! வெளியூரில் வசிக்கும் மக்கள்! அரசுக்கு வைக்கும் கோரிக்கை!!