காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய சார்பில் தகுந்த பதிலடி பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ நடவடிக்கையாகவும் தரப்படுகிறது. இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை இணைந்து “ஆப்ரேஷன் சிந்தூரை” நேற்று இரவு பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து விமானத்தாக்குதல் நடத்தின.

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதி மசூத் ஆசார் குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மோடி அரசின் சரியான பதிலடி.. "ஆப்ரேஷன் சிந்தூர்" குறித்து அமித் ஷா பெருமிதம்..!
இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு, “இந்தியாவின் தாக்குதல் அப்பட்டமான போர் செயல், இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என மிரட்டல் விடுத்துள்ளது.இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் இந்தியாவின் தாக்குதல் குறித்து நேரில் பார்த்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகையில் “ 4 ஆள் இல்லா விமானங்கள் பறந்துவந்தன, திடீரென குண்டுகளை வீ்சிவிட்டு கண்இமைக்கும நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது” எனத் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இந்திய உளவுத்துறையும் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் இருப்பிடத்தை அடையாள் கண்டறிந்தது. அதன்பின்புதான் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.
இந்தியாவின் தாக்குதலை நேரில் பார்த்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த முசாபராபாத் பகுதியைச் சேர்ந்த முகமது வஹீத் என்பவர் கூறுகையில் “ இரவு 12.45 மணி இருக்கும், விமானம் பறப்பதுபோல் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது, ஒரு விமானம் மட்டும் வந்து திடீரென குண்டுகளை வீசியபோது என் வீடு குலுங்கியது. உடனே என் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு சாலைக்கு வந்துவிட்டேன். அதைத் தொடர்ந்து 3 விமானங்கள் குண்டுவீசின. இதில் மசூதிகள், வீடுகள் இடிந்து தரைமட்டமானது, முதலில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை, சிறிது நேரத்தில் மக்கள் பதற்றத்துடன் ஓடத்தொடங்கினர். அந்தப்பகுதி முழுவதுமே அழிந்து நாசமானது ” எனத் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல் நடத்திய இடம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கே என்ற இடமாகும். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பயிற்சி அளிக்கும் முக்கிய இடம் இங்கு இருக்கிறது. இங்குள்ள தீவிரவாத பயிற்சி முகாமில் ஆண்டுக்கு 1000 மாணவர்கள் பயிற்சி எடுத்து வெளியே செல்கிறார்கள், ஜிகாத் என்ற பெயரில் ஏராளமானோர் தீவிரவாத அமைப்பில் இங்குதான் சேர்த்து பயி்ற்சி அளிக்கப்படுகிறது. இங்குதான் இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?