காஷ்மீர் பஹல்காமில் நடந்த இந்துக்கள் படுகொலைக்குப் பிறகு இந்தியாவின் கோபத்தைக் கண்டு பாகிஸ்தான் ராணுவம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹசீம் முனீர் கூறினார். இவர் இப்படி சொன்னாலும் பாகிஸ்தான் ராணுவம், மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவத்தில் ராஜினாமாக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராணுவ வீரர்கள், பாதுகாப்பு துறை உயரதிகாரிகள் வேலையே வேண்டாம் என ஓட்டம் பிடிக்கின்றனர்.

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என தெரிந்தது. இந்திய எல்லைக்கு அருகிலுள்ள தில்லா பீல்ட் பயரிங் ரேஞ்சில் பாகிஸ்தான் தற்போது ராணுவம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர, பாகிஸ்தான் விமானப்படை மற்றும் கடற்படையும் தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதைக் காட்ட தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: போர் பதற்றம்... 29 நகரங்களில் அவசரகால சைரன்கள்... நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

தில்லா துப்பாக்கிச் சூடு தளத்திற்கு சென்ற அசிம் முனீர், பாகிஸ்தான் ராணுவத்தை தேசத்தின் பாதுகாப்பின் சின்னம் என்று புகழ்ந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகர் பகுதிகளில் அபாய குரல் எழுப்பும் கருவிகளை உயர் கம்பங்களின் உச்சியில் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண அரசாங்கம், பெஷாவர் மற்றும் அபோட்டாபாத் உட்பட 29 மாவட்டங்களில் அபாய குரல் எழுப்பும் சைரன் கருவிகளை நிறுவ உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஜார் பகுதியில் ஏர் சைரன்கள் பொருத்தப்பட்டிருக்கும் படங்களும் வெளியாகின. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 500 கி மீட்டர் தொலைவு வரை பகுதிகளிலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகளிலும் பாகிஸ்தான் விமான சைரன்களை நிறுவி வருகிறது. இதற்குக் காரணம், ஆப்கானிஸ்தானின் ஆதரவுடன் இந்தியா பாகிஸ்தானைத் தாக்கக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

பஹல்காம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. அங்கு சைரன்கள் பொருத்தப்படுவது பாகிஸ்தானின் போர் அச்சத்தை தெளிவாக காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இந்த நிலையில் இந்தியா போரைத் துவக்கி வான்வெளி தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதரஸா உட்பட பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும்பாலும் மத பாடசாலைகள் தான் அதிகம் உள்ளன. 445 பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களில் 26 ஆயிரம் மாணவர்கள் இருப்பதாக, மத விவகாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதரஸாக்களை பயங்கரவாத பயிற்சி கூடமாக நடத்தி வருவதாகவும், ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அங்கு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!