• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி ஆண்டவனுக்கு அரோகரா..!! 3ம் படை வீட்டில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    பழனி முருகன் கோவிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
    Author By Editor Fri, 18 Jul 2025 17:54:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-murugan-temple-receives-rs-2-crore-in-offerings

    அழகென்ற சொல்லுக்கு முருகா... தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

    2 கோடி ரூபாய்

    அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிவிடும். குறிப்பாக தைப்பூசம், பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பர். இதேபோல பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பழனி கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம். 

    இதையும் படிங்க: அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    மேலும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் 690 படிகள் ஏறமுடியாத வயதானவர்கள், சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

    2 கோடி ரூபாய்

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு விஷேச நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம், நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பின்பு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணி அளவிடப்படுகிறது. 

    அதன்படி நேற்று, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்ட உண்டியல்கள் எடுத்து வரப்பட்டு, அதில் செலுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளியிலான நகைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 கிடைத்தது. மேலும் தங்க பொருட்கள் 5 ஆயிரத்து 5 கிராம், வெள்ளி 11 கிலோ 438 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 1,324-ம் கிடைத்தன என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 5,005 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.
     
    இதையும் படிங்க: பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க.. ஒரு மாதத்திற்கு பழனி முருகன் கோவிலில் இது கிடையாதாம்..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share