தூத்துக்குடி கீழ அலங்கார தட்டு பகுதியை சேர்ந்த ஜான் சேவியர் நகர் பகுதி மீனவர் காலனி பகுதியில் உள்ள ஐஸ் பிளாண்டில் இருந்து அமோனியா கேஸ் வெளியேறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிப்பு. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி அமோனியா கேஸை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றினர்.
தூத்துக்குடிக்கு குரூஸ் புறம் பகுதி சேர்ந்த ஒயிட் என்பவருக்கு சொந்தமான ஐஸ் பிளாண்ட் ஜான் சேவியர் நகர் பகுதி சேர்ந்த மீனவர் காலனி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஐஸ் பிளாண்டில் முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் அடிக்கடி அம்மோனியா கேஸ் வெளியேறி அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு தனியார் ஐஸ் பிளாண்ட் பகுதியில் முறையான பராமரிப்பது இல்லாத காரணத்தினால் அதிக அளவு அம்மோனியா கேஸ் வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்களுக்கு மூச்சு திறல் ஏற்பட்டு அந்தப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி வேறு பகுதிகுக்கு செல்ல துவங்கினர்.
இதையும் படிங்க: அதிகாலையில் பயங்கரம்.. 3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி...!
இதை தொடர்ந்து உடனடியாக அந்தப் பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து அம்மோனியா கேஸ் மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமோனியா கேஸ் வெளியேறியதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விடுகளை விட்டு வெளியேறி தங்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்ல தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் வந்து அம்மோனியா கேஸ் வெளியேறதை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு பகுதியில் தனியா ஐஸ் நிறுவனத்தில் இருந்து அமோனியா கேஸ் வெளியேறி மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயிரே போனாலும் ஆக.13 முதல் மூலிகை பெட்ரோல் விநியோகம்... அண்ணாமலைக்கு ராமர் பிள்ளை வைத்த திடீர் கோரிக்கை...!