அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையிலான உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தீர்ப்பதற்கான பஞ்சாயத்து பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடந்து வருவதாக தெரிகிறது. இதற்காகவே முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மாறி, மாறி டெல்லி சென்று அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்திற்கே முடிவு தெரியாத நிலையில், தற்போது பாமகவின் பிரச்சனை அமித் ஷாவின் டெல்லி வீட்டு கதவைத் தட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து முரண்பாடு காரணமாக கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களை கூட்டி பொதுக்குழுவை நடத்தினார் அப்போது ஒரு ஆண்டிற்கு தலைவர் பதவியை நீடித்தார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதேபோல் விழுப்புரம் மாவட்டம் பட்டனூரில் பொதுக்குழுவை கூட்டி தலைவராக இருப்பேன் என அறிவித்திருந்தார் இதனால் பாமாக்கவில் பெரும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர் சந்திப்பின் போது, அன்புமணியை செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பாமகவில் இருவருக்கும் மோதல் போக்கு கடுமையாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாமக அன்புமணி தரப்பில் உள்ள வழக்கறிஞர் பாலு தேர்தல் ஆணையத்திலிருந்து லெட்டர் ஒன்று வந்ததாக தெரிவித்தார். அந்த லெட்டரில் அன்புமணியை தேர்தல் ஆணையம் ஏற்றதாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அன்புமணி தேர்தல் ஆணையத்தையே ஏமாத்திட்டாரு! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டு
இதற்கு ராமதாஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ராமதாஸ் தரப்பில் உள்ள முரளிசங்கர், எம்எல்ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆணயத்தை அணுகி இருந்தனர். அப்போது ராமதாஸுக்கு தெரியாமல் கட்சி அலுவலக முகவரி மாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்