த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கி உள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதில், பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்-க்கு தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
திருச்சியில் பிரச்சாரம் நடந்த விஜய் தரப்பிற்கு போலீசார் 23 நிபந்தனைகளை விதித்திருந்த நிலையில், பெரும்பாலான கட்டுப்பாடுகளை அவரது தொண்டர்கள் தும்சம் செய்துள்ளனர். இதனிடையே நாகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பெண் தொண்டர்களுக்கு ஏற்பட்ட நிலையால் அதிர்ச்சியில் விஜய்... தவெக பரப்புரையில் பரபரப்பு...!
நாகை அவுரித்திடலில் அதேநாளில் திமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறி விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவுரித்திடலில் கூட்டம் நடத்துவதற்காக எற்கனவே நகராட்சி அலுவலகத்தில் திமுகவினர் புக்கிங் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக சார்பில் பரிந்துரைத்த மாற்று இடங்களிலும் இட வசதி போதாது எனக்கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
நாகையில் அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் போதுமான இடவசதி இல்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது தவெகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல்... திடீர் கடையடைப்பு... விஜய் வருகையால் திணறும் திருச்சி....!