ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானில் 5 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் தாக்குதல் அப்பட்டமான போர் செயல்’.. பதிலடி தருவோம்..! கதறும் பாகிஸ்தான்..!

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமிர்தசரஸ்- பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா அழித்தது. பஞ்சாப் எல்லையில் ட்ரோன், ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி சுக்கு நூறாக்கியது.

தற்போது பஞ்சாபில் வயல் பகுதியில், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் கிடக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஆபரேஷன் சிந்தூர்": ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!