• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல்: ‘ராபர்ட் வத்ரா தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஆதரவாகப் பேசுகிறார்’: பாஜக பாய்ச்சல்..!

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா, பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
    Author By Pothyraj Thu, 24 Apr 2025 16:01:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Robert-Vadra-links-Pahalgam-terror-attack-to-govt's-Hindutva-push

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ரா, பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார். ராபர்ட் வத்ராவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசும் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

    Pahalgam attack

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதல் குறித்து ராபர்ட் வத்ரா கூறுகையில் “எப்போதெல்லாம் வகுப்புவாத சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டில் இருக்கும் பிரிவினை, அண்டை நாடுகளுக்கு லாபமாக இருக்கிறது. அரசியலையும், மதத்தையும் பிரித்து வைக்கவேண்டும், அரசியல் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: ஐ.நாவை விட்டு தூக்கணும்.. பாகிஸ்தானுக்கு எதிராக மதுரை ஆதீனம் ஆவேசம்...!

    Pahalgam attack

    தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, சுற்றுலாப்பயணிகள் அடையாள அட்டையை பார்த்து, முஸ்லிம் அல்லாதவர்களை குறிவைத்து தாக்கியுள்ளனர், பிரதமருக்கும் செய்தி அனுப்பியுள்ளனர். ஏன் இது நடக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படுவதாக தீவிரவாதிகள் நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் இது என்னுடை தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சி சார்பாகவோ, தன் குடும்பத்தினர் சார்பாகவோ பேசவில்லை என ராபர்ட் வத்ரா தெரிவித்தார்.

    மேலும் “சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவதாக நான் உணர்கிறேன். அவர்கள் தொழுகை நடத்தும்போது, அவர்கள் தங்கள் கூரைகளில் தொழ அனுமதிக்கப்படுவதில்லை. வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிறுபான்மையினர் சாலையில் தொழுதால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மசூதிகள் குறித்து சர்வே செய்யப்படுகிறது.

    Pahalgam attack

    சிறுபான்மையினருக்காக கடைசியாகப் பேசியபோது அமலாக்கப்பிரிவு எனக்கு சம்மன் அனுப்பியது, தவறு நடக்கும்போதெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்புவேன். ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடவுள்களையும் நம்பிக்கைகளையும் சாலைகளிலும் கொண்டாடலாம். நாம் அனைவரும் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது, அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், நாம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்போம், எல்லையோர நாடும் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

    Pahalgam attack

    ராபர்ட் வத்ராவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நளின் கோலி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ராபர்ட் வத்ராவின் கருத்துக்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை.  இதேபோலத்தான் தீவிரவாதிகளும் தங்களின் தீவிரவாதத்தை நியாயப்படுத்த பேசுவார்கள். இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒற்றுமையாக இருக்கும்போது, அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று ராபர்ட் வத்ரா முயல்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த பேச்சுக்கு ராபர்ட் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும்.

    ராபர்ட் வத்ராவின் பேச்சைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி இரட்டைவேடம் போடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னவிதமான நீதியை பெற்றுத்தர ராபர்ட் கோருகிரார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், ராபர்ட் வத்ரா மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    Pahalgam attack

    பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் கூறுகையில் “தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் கண்டிப்பதற்கு பதிலாக வெட்கமின்றி ஆதரித்து வத்ரா பேசுகிறார். கர்னால் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வத்ரா நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும், நம்முடைய ராணுவம் வலுவானது, நிச்சமயாக பாகி்ஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் இதை எளிதாக எடுக்கமாட்டோம். நாம் உண்மையாகவே ஒற்றுமையாக இருக்கிறோம், ஒன்றுபட்டு, எந்தத் தாக்குதலிலும் பாதிக்கப்படமாட்டோம் என்பதை நிரூபிப்போம்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஏவுகணைச் சோதனை? - இந்தியாவின் கோபத்தை சீண்டும் பாகிஸ்தான்...! 

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share