அதிகாலை 1:28 மணிக்கு, இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கிலோமீட்டர் தொலைவில் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கை மூலமாக பஹல்காமில் பலியான 26 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது:
பஹவல்பூரில் மர்கஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலானில் இருந்த சர்ஜால், கோட்லியில் அமைந்திருந்த மர்கஸ் அப்பாஸ், முசாபராபாதில் இருந்த சையத்னா பிலால் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் 4 முகாம்கள், முரிட்கேவில் இருந்த மார்கஸ் தைபா, பர்னாலாவில் இருந்த மர்கஸ் அஹ்லே ஹதீஸ், முசாபராபாத் இருந்த ஷவாய் நல்லா கேம்ப் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் தரைமட்டமாகியுள்ளன.
இதையும் படிங்க: சுக்கு நூறாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்கர்கள்..! அலறும் தீவிரவாதிகள்..!

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளின் சியால்கோட்டில் இருந்த மெஹ்மூனா ஜோயா முகாம், கோட்லியில் இருந்த மஸ்கர் ரஹீல் ஷாஹித் ஆகிய முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் முகாம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ...









இதையும் படிங்க: ஓவைசியின் பூரிக்க வைக்கும் தேசப்பற்று..! ஒரு அடி கூட எதிரி எடுத்து வைக்கக்கூடாது..!