வளைகுடா நாடுகளில் 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த 'கபாலா' முறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது சவூதி அரேபியா. இதன் மூலம், இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இருந்து செல்லும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுதந்திரமாக வேலை மாற்றவும், நாடு திரும்பவும் முடியும். இது புலம்பெயர்ந்தோருக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
கபாலா என்றால் என்ன?
அரபு மொழியில் 'ஸ்பான்சர்ஷிப்' என்று பொருள்படும் கபாலா முறை, 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், வெளிநாட்டு தொழிலாளர்களை 'கபீல்' (ஸ்பான்சர்) என்ற முதலாளி முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். விசா, பயணம், தங்குமிடம், உணவு – எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துவார்.
தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின்படி வேலை மாற்றவோ, சொந்த நாட்டுக்கு திரும்பவோ முடியாது. இதனால், சுரண்டல், துன்புறுத்தல், ஊதிய தாமதம் போன்ற பிரச்னைகள் அதிகரித்தன. இந்தியாவில் இருந்து மட்டும் 25 லட்சம் தொழிலாளர்கள் சவூதியில் பணியாற்றுகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்!
ஏன் ஒழிக்கப்படுகிறது?
சவூதி இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆய்வு, சீர்திருத்தங்களுக்குப் பிறகு, அக்டோபர் 21 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சவூதியில் மக்கள் தொகையில் 42% புலம்பெயர்ந்தோர்.
இவர்கள் கட்டுமானம், வீட்டு பணி, வேளாண்மைத் துறைகளில் பணியாற்றுகின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, இந்தியா உட்பட 5 மில்லியன் தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்க்ள் என கணிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் என்ன?
- ஸ்பான்சர் ஒப்புதல் இன்றி வேலை மாற்றலாம்.
- நாட்டை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்.
- ஊதியம், உரிமைகள் ICC (சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தம்) விதிகளுக்கு இணங்கும்.
- 2026 முதல் முழுமையாக அமல்படும்.
இந்திய வெளியுறவு அமைச்சகம், "இது நமது தொழிலாளர்களுக்கு வரவேற்கத்தக்கது. பிரேசி (புலம்பெயர்ந்தோர்) பாதுகாப்பு வலுப்படும்" என்று வரவேற்றுள்ளது. தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவி, "கபாலா சுரண்டல் முடிந்தது. புதிய ஒப்பந்தங்களைப் பின்பற்றுங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளவில் தொழிலாளர் அமைப்புகள் இதைப் பாராட்டியுள்ளன. ஆனால், சில முதலாளிகள் "தொழிலாளர்கள் பணம் பெற்றும் தப்பிவிடுவார்கள்" என விமர்சிக்கின்றனர். இந்த மாற்றம், வளைகுடா பிராந்தியத்தில் புதிய யுகத்தைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் நட்பு பாராட்டும் ஆப்கான்! பாக்., வயிற்றெரிச்சல்! தக் ரிப்ளை கொடுத்த அமைச்சர்!