இந்த செப்டம்பர் மாதம் வானியல் அற்புதங்களை கண்டு ரசிக்க சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏற்கனவே விண்கற்கள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பிளட் மூன் முதல் கிரக இணைப்புகள் வரை திகைப்பூட்டும் வானியல் அற்புதங்கள் நமக்காக காத்திருக்கின்றன. முதலில் செப்டம்பர் 7ம் தேதி முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு நிலா அன்று சிவப்பு வண்ணத்தில் பிரகாசிக்கவுள்ளது. இது பிளட் மூன் என அழைக்கப்படுகிறது. இந்த கிரகணமானது செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:00 மணி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 12:22 மணி வரை தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவில் தெளிவாக பார்க்க முடியும்.
செப்டம்பர் 8 ஆம் தேதி ஒரு அரிய கிரக இணைப்பு நிகழவுள்ளது. அதாவது அன்றைய தினம் சந்திரன், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் தோன்றவுள்ளன. இந்த நிகழ்வின் போது சனிக்கோளை வெறும் கண்களால் பார்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 16ம் தேதி நிலவும், வியாழனும் அருகருகே பயணிக்கவுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி, ஐரோப்பா, கிரீன்லாந்து, கனடாவின் சில பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வீனஸ் சந்திரனைக் கடந்து செல்லும் காட்சிகளை காண முடியும்.
இதையும் படிங்க: ஆட்டம் காணும் எடப்பாடியின் "இரட்டை நாற்காலி"... உலுக்கியெடுக்கும் மூவர் அணி ...!
செப்டம்பர் 21ம் தேதி அன்று சனிக்கோள் நமக்கு மிக அருகில் பிரகாசமாக காட்சியளிக்கும். அதனை வெறும் கண்களால் கூட தெள்ளத்தெளிவாக பார்க்க முயும். அதேசமயம் தொலைநோக்கி வைத்திருப்பவர்கள், சனிக்கோளின் வளையத்தைக்கூட கண்டு ரசிக்கலாம்.
செப்டம்பர் 22 அன்று தெற்கு பசிபிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் ஒரு பகுதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனையும் அப்பகுதி மக்கள் வெறும் கண்களால் காண முடியும்.
செப்டம்பர் 23ம் தேதி அன்று நெப்டியூன் கோள் பிரகாசமாக ஒளிரும், நீல நிறத்தில் ஒளிரும் அதனை தொலை நோக்கி மூலம் கண்டு ரசிக்கலாம். செப்டம்பர் 28ம் தேதி பகலும், இரவும் சம அளவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் விண்மீன்களின் மழையைக் காணலாம். ஆக மொத்தம் செப்டம்பர் மாதம் நமக்கு வானில் பல வானியல் அற்புதங்களை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: ரூ.200 கோடி நஷ்டம்.. ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு புது சிக்கல்...!