ஆன்லைன் மூலமாக பட்டாசு வணிகம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விளம்பரப்படுத்துவதோ, விற்பனை செய்வதோ கூடாது. ஆன்லைன் பட்டாசு வர்த்தகம் தொடர்பான புகார்கள் மீது சைபர் கிரைம் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்வதுடன் மட்டுமின்றி, ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யும் நபர்கள் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர வேண்டும்.
சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்கள் குறித்து விளம்பரம் செய்யக்கூடாது. என மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது:- உச்சநீதிமன்ற த்தடையின் படியும், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவு ப்படியும் ஆன்லைன் பட்டாசு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் பட்டாசு வணிகத்தில் பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது ஆன்லைன் பட்டாசு வணிகத்தினால் மட்டும் தமிழகம் முழுவதிலும் பட்டாசு கடைகளின் நேரடி விற்பனையில் ரூபாய் 200- கோடிக்கு பட்டாசு வியாபாரம் பாதிக்கப் பட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் தங்களின் ரூ.20 கோடி வரையிலான பணத்தை இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் பரப்புரை நடந்த இடத்தில் பயங்கர விபத்து... கல்லூரி பேராசிரியர் பலி..!
200-க்கும் மேற்பட்ட புகார்களுடன், சைபர் கிரைம் மூலமாக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத பட்சத்தில், நடப்பாண்டிலும் ஆன்லைன் பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் கூறுவதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அதேபோன்று ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது போல ஆன்லைன் பட்டாசு விற்பனையையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். என்றார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு... இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்...!