பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. சில நேரங்களில் தண்ணீர் சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது, அதனால் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி காத்திருந்து கிடைக்கும் தண்ணீர் சில நேரங்களில் மண் கலந்து வருவதாகவும், இதனால் உடல்நலன் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த நீர் சுமார் 184 அடிக்கு கீழ் ஆழ்த்ததுளையிட்டு எடுக்கப்படுகிறது. இப்படி அதிகரிக்கும் ஆழ்த்ததுளை கிணறுகளின் எண்ணிக்கையால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தினசரி தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஆழ்த்ததுளை கிணறுகள் இல்லை. நீர் மட்டும் இங்கு குறைந்துள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த வேண்டியுள்ளது. தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா என்று கூட பலர் பார்ப்பதில்லை.
அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் பலருக்கும் நோய் தோற்று ஏற்படுகிறது. சிலர் தாங்கள் துணி துவைக்க உபயோகித்த தண்ணீரை மீண்டும் பாத்திரங்கள் மற்றும் கழிப்பறையை கழுவ பயன்படுத்துகிறார். இங்கு சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைப்பதில்லை. நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இந்த தண்ணீரை கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். ஆனால் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இந்த நீர் எங்கிருந்து கிடைக்கிறது என தெரியாது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதிகள் ஏற்படுகிறது என பாகிஸ்தான் தாய்மார்கள் கதறுகிறார்கள்.
கடும் தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தி டேங்கர்களுக்கு மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது. இதனால் தண்ணீர் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் ஒரு குடும்பம் 20% வருமானத்தை தண்ணீருக்காக செலவு செய்கின்றன. ஆனால் இதற்கும் வழியில்லாத நலிவடைந்தவர்கள் அசுத்தமான தண்ணீரையே குடிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரால் தான் இங்குள்ள பலருக்கும் ஹெப்பைடிஸ் சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆண்டுதோறும் இஸ்லாமாபாதில் சுமார் ஒரு மீட்டர் அளவில் நிலத்தடி நீர் சரிந்து வருகிறது. நகரமயமாக்களால் குறைந்து போன காடுகளின் பரப்பளவு இந்த இழப்புக்கான முக்கிய காரணியாக இருக்கலாம். “பாகிஸ்தானில் தண்ணீர் இல்லை என நான் சொல்ல மாட்டேன். இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் நிர்வாக திறமை இன்மை. இஸ்லாமாபாத்தில் அரசாங்கமும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவி இருக்கின்றனர். ஆனால் அதில் தரத்தை உறுதி செய்யும் ஆலைகள் குறைவுதான் ” என மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: அமிர்தசரஸிலிருந்து அடிச்சா லாகூர் காலி... அதி பயங்கர ஆயுதத்தை களமிறக்கும் இந்தியா - கதி கலங்கும் பாக்.!
எனவே பாகிஸ்தான் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி அரசு ஆய்வகங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த திறமையான பணியாளர்களும் வேண்டும். மாசாடைந்த நிலத்தடி நீர் ஒழுங்கு முறைகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாதில் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் புதிய திட்டங்களை வெளியிட்டதோடு நின்றுவிடாமல் அதனை துரிதமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்த தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் மீள முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஃப்ரீ லேப்டாப்.. அப்ளிகேஷன் போட்ட 3 நிறுவனங்கள்.. தமிழக அரசின் அடுத்த மூவ்!