இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேலான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது.

இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டமானது தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம், பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: NRC தான் அவங்க குறிக்கோள்... SIR குடியுரிமை மீதான தாக்குதல்... உடைத்து பேசிய திருமா
 
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை நிறுத்தி வைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் தலைமையில் நடத்த இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தை நாடி அனைத்து கட்சிகளும் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
,. 
இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!