புர்கினா பாசோ நாட்டின் அதிபர் இப்ராஹிம் டிரோரா மசூதியில் பிரார்த்தனை செய்ய குனிந்தபோது அவரை பின்னால் இருந்து சுட கொலைகாரர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை வழங்கி குறி வைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏன் குறி வைக்கப்பட்டார்..? அந்த நாட்டுக்கு என்ன செய்தார் டிரோரா..?
புர்கினா பாசோவில் ஜனாதிபதியாக இப்ராஹிம் இப்ராஹிம் டிராரே பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளுக்குள் 18வது முறையாக கொலை முயற்சிக்கு ஆளாகி உள்ளார். செப்டம்பர் 2022-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புர்கினா பாசோ நாட்டின் அதிபர் இப்ராஹிம் டிரோரா மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். இது காலனித்துவவாதிகளுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

ஒரு சர்வாதிகாரியாக இல்லாமல் இருப்பதற்காக காலனித்துவ ஊடகங்களால் தொடர்ந்து தாக்கப்படுகிறார் இப்ராஹிம் டரோரா. இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் டரோரா மிகவும் துணிச்சலாக சவால் விடுத்தார். "நாம் ஒரு ஜனநாயகத்தில் இல்லை. நாம் உண்மையில் ஒரு முற்போக்கான மக்கள் புரட்சியில் இருக்கிறோம். அனைவரும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்குச் சென்ற அறிவுஜீவிகளாக இருக்க வேண்டியவர்கள். ஒரு நாடு ஜனநாயகத்திற்குள் வளர முடியும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீட்டில் கூட வாழ முடியல; இதான் உங்க திராவிட மாடலா? கடுப்பில் கழுவி ஊற்றிய சீமான்!!
புர்கினா பாசோவைப் பொறுத்தவரை, காலனித்துவவாதிகள் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு நிதியளிக்கவும், படுகொலை முயற்சிகளை ஏற்பாடு செய்யவும் தயாராக உள்ளனர். அவர்களை ஏமாற்றி, எண்ணற்ற சவால்கள் இருந்தபோதிலும் புர்கினா பாசோவின் வரலாற்றில் மிகப்பெரிய 2 ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் ஒன்றை நிறைவேற்றிய நபராக இருக்கிறார் இப்ராஹிம் டிராரே.
புர்கினா பாசோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் $18.8 பில்லியனில் இருந்து 2024 இல் $22.1 பில்லியனாக தோராயமாக 17.5% அதிகரித்துள்ளது. அரசாங்கம் உள்ளூர் கடன்களை வெற்றிகரமாக நீக்கி, நிதி சார்புநிலையைக் குறைத்தது. அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற சம்பளங்கள் 30% குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் 50% அதிகரித்தது.

சுத்திகரிக்கப்படாத தங்கத்தை ஏற்றுமதி செய்வதை டிரோரா தடை செய்தார். உள்நாட்டு செயலாக்கம், வளங்கள் மீதான தேசிய கட்டுப்பாட்டை உறுதி செய்தார். 2025 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ள புதிய டான்சின் விமான நிலையம், ஆண்டுதோறும் 1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவரது நிர்வாகம் புதிய மருத்துவமனைகள், மொபைல் கிளினிக்குகளில் முதலீடு செய்து, சுகாதாரப் பராமரிப்பை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியது. நாட்டின் 13 பகுதிகளிலும் இலவச கல்வி முயற்சிகள், புதிய அறிவியல் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

மத உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விட, புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரின் வளர்ச்சிப் பார்வைக்கு உத்வேகம் அளித்துள்ளது. அந்நாட்டில் 200 மசூதிகளை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர முன் வந்தது சவுதி அரேபியா. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரர். அதற்குப் பதிலாக அடிப்படை வசதிகளை செய்ததரக்கோரி சவுதி அரேபியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: புருஷனை சுட்டுக் கொன்றவர்களுக்கு வக்காலத்து... புத்தி கெட்டுப்போனாரா புல்லட் லவ்வர்..? வலுக்கும் எதிர்ப்பு..!