இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான பதற்றம் இன்னும் தணியவில்லை. மறுபுறம், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் எதிரா பல நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. திடீரென உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவை ஆதரிக்கும் அதே வேளை பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலூச் விடுதலை போராட்டக்குழுவினர் இந்தியாவிற்கு வெளிப்படையான ஆதரவை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

பலூச்சிஸ்தானின் பலூசிஸ்தான் விடுதலை போராட்டக்குழு பாகிஸ்தானுக்கு எதிரான ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானை பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்க பலூச் விடுதலைப்படை நீண்ட காலமாக போராடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தை இப்போது அழிக்க டார்க்கெட் வைத்துள்ளது.
பலூசிஸ்தான் விடுதலை போராட்டக்குழு பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி பிரச்சனையை உருவாக்க முயன்றது. அதனடிப்படையில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது பலூச் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்தால், பலூச் விடுதலைப்படை துணை நிற்கும் என்று கூறியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால், பலூச் விடுதலைப்படை அதற்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானியர்களை மேற்கு எல்லையில் இருந்து தாங்கள் தாக்குதலை தொடுப்போம் என்றும், இந்தியா எங்களை ஆதரிப்பதோடு அந்நாட்டின் இராணுவ பலத்தின் காரணமாகவும் தாங்கள் துணை நிற்க தயாராக உள்ளதாக பலூச் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவப் படையை ஓட ஓட விரட்டியடித்த பலூச் படை... அதிர்ச்சி வீடியோ..!