அமெரிக்காவில் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சட்டபூர்வ அனுமதி பெற்று பணியாற்றி வருகின்றனர். டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதுடன் உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தி ஒன் பிக் பியூட்டிபூல் பில் என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. 25 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்!

இதனால் கிரீன் கார்டு மற்றும் H1B, H2A, H2B விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு அங்கு வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களையும் வெகுவாக பாதிக்கிறது.

இதையும் படிங்க: தலைவிரி கோலத்தில் நடனமாடிய பெண்கள்.. அபுதாபிக்கு சென்ற அதிபர் ட்ரம்புக்கு காத்திருந்த ஷாக்..!