அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்தது, தற்போது தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை மேலும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை குறிவைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு ஐடி அவுட்சோர்சிங் செய்வதைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருவதாக டிரம்பின் உதவியாளரும் தீவிர வலதுசாரி ஆர்வலருமான லாரா லூமர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"அமெரிக்க ஐடி நிறுவனங்கள் தங்கள் பணிகளை இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்வதைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் இப்போது பரிசீலித்து வருகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆங்கிலத்திற்கு இனி 2 ஐ அழுத்த வேண்டிய அவசியமில்லை. கால் சென்டர்களை மீண்டும் அமெரிக்கராக்குங்கள்!" லூமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி "ஆங்கிலம் பேசத் தெரியாத ஒருவருடன் பேச ஆங்கிலத்தில் பேச 2 என்ற எண்ணை அழுத்தும் நாளை அதிபர் டிரம்ப் முடிவுக்குக் கொண்டுவருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் அருமை" என லூமர் சோசியல் மீடியாவில் நக்கலாக பதிவிட்டுள்ளது, இந்தியர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: இனி அமெரிக்காவில் இதை செய்ய நினைத்தால் இதுதான் கதி... உலக நாடுகளை எச்சரித்த டிரம்ப்...!
அதேசமயம் இப்படியொரு முடிவெடுத்தால் ஐ.டி.நிறுவனங்கள் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் கொடுப்பதை நிறுத்தாது என்றும், மாறாக தங்கள் நிறுவனத்தையே கூட இந்தியாவிற்கு மாற்றிவிடும் என்றும் வாதிட்டு வருகின்றனர்.
கால் சென்டர்கள் மட்டுமல்ல, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலேயே முழு வளர்ச்சி மையங்களையும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டு, மலிவான உழைப்பு காரணமாகவே இத்தகைய அவுட்சோர்சிங் நடைபெறுவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஒருசிலர், இந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், அமெரிக்கர்களுக்கு ஐடி வேலைகள் கிடைக்கவில்லை என்றும் கூறி டிரம்ப் முடிவை வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னாது.. டிரம்ப் இறந்துட்டாரா? - திடீரென ட்ரெண்டாகும் "TRUMP IS DEAD" ஹேஷ்டேக் - உண்மை என்ன?