லாஸ் ஏஞ்சலஸ்: உலகின் மிகப்பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், நூற்றாண்டு கால பிரபலமான ஹாலிவுட் ஸ்டூடியோ வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடி ($82.7 பில்லியன்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வாங்கியுள்ளது.
இதனால் வார்னர் பிரதர்ஸின் திரைப்பட ஸ்டூடியோக்கள், ஹெச்பிஓ, டிசி காமிக்ஸ், ஹாரி பாட்டர், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற பிரபல படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை நெட்ஃப்ளிக்ஸின் கையில் செல்வதாக உள்ளது. இந்த ஒப்பந்தம் 2026 முதல் 18 மாதங்களுக்குப் பிறகு முடிவடையும்.
இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். “நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே மிகப்பெரிய சந்தை மதிப்புடன் இருக்கிறது. வார்னர் பிரதர்ஸை வாங்குவது மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைமையில் 3வது கூட்டணி... NDA- வுக்கு பின்னடைவு... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி...!
அண்மையில் வெள்ளைமாளிகைக்கு சென்ற நெட்ஃப்ளிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சராண்டோஸை பாராட்டிய டிரம்ப், “திரைப்பட வரலாற்றில் சிறந்த பணிகளைச் செய்தவர்” என்று கூறினார். ஆனால், இந்த ஒப்பந்தம் “பெரிய தலைவலி” தரும் என்று வார்னிங் கொடுத்தார்.

நெட்ஃப்ளிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சராண்டோஸ் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் உலகின் சிறந்த கதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். வார்னர் பிரதர்ஸின் நூற்றாண்டு வரலாற்றை நெட்ஃப்ளிக்ஸ் புதுமையுடன் இணைக்கிறோம்” என்றார். வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி தலைவர் டேவிட் ஜாஸ்லாவ், “இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த தலைமுறைக்கு படைப்புகளை உருவாக்கும்” என்றார்.
இந்த ஒப்பந்தம், ஸ்ட்ரீமிங் போராட்டத்திற்கு முடிவு போடுகிறது. நெட்ஃப்ளிக்ஸ், 300 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் மிகப்பெரிய ஓடிடி நிறுவனம். வார்னரின் ஹெச்பிஓ, டிசி காமிக்ஸ் போன்றவை இணைந்தால், இது ஹாலிவுட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், டிரம்பின் எச்சரிக்கை, போட்டி ஆணையம், யூனியன் பிரச்சனைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: நோட்டாவுக்கு NO!! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!! கேரள உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையம் அப்டேட்!