வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அவசர அவசரமாக வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துமத மற்றும் அவரது கணவர் ஆகியோர் இறந்து விட்டதாக வாக்காளர் பெருத்த பட்டியலில் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து... DIG வருண் குமார் தொடர்ந்த வழக்கில் அதிரடி காட்டிய மதுரை கோர்ட்...!
உயிரோடு இருக்கும்போது இறந்து விட்டதாக எப்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர். இது போன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது திருத்தங்கள் இருந்தால் அதனை கூறலாம் என்றும் அனைவரிடமும் சரி பார்ப்பதற்காகவே பட்டியல் வழங்கி இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: போடா… ஆளும் மை**ம்… SIR கேள்வியால் ஆத்திரம்… செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்…!