இங்கிலாந்து அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் இன்று தனது பதவியிலிருந்து விலகினார். 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் (ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறல்) நடைபெற்றதிலிருந்து இது ஆறாவது பிரதமர் ராஜினாமா ஆகும். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது முறையாக ஒரு பிரதமர் பதவி விலகிய சம்பவம் இது.
இன்று மதியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த ஸ்டார்மர், தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை சமர்பிக்கிறார். இந்த சந்திப்பு சுருக்கமாக இருந்தாலும், பிரிட்டிஷ் அரசியல் அமைப்பின் பாரம்பரியத்தைப் பிரதிபலித்தது. ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம் மன்னரைச் சந்தித்தார். மன்னர் அவருக்கு புதிய அரசாங்கத்தை அமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுப்பார்.

பாரம்பரியத்தின்படி, பர்ன்ஹாம் மன்னரின் கையை முத்தமிட்டு தனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவார். இதனைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்படுவார். அரண்மனையிலிருந்து வெளியேறிய புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நேராக 10 டவுனிங் தெரு அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்வார். அங்கு வாசலில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையில் பொருளாதார சவால்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பிரெக்ஸிட் பின்விளைவுகளைச் சமாளிப்பது குறித்து விரிவாகப் பேசவுள்ளார்.
இதையும் படிங்க: “அனிதா மேல கைவச்ச வேலை காலியாகிடும்...” - போலீஸ் Vs திமுகவினரிடையே தள்ளுமுள்ளு... உச்சக்கட்ட பரபரப்பு....!
இந்த மாற்றம் பிரிட்டனின் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. பர்ன்ஹாம், கிரேட்டர் மான்செஸ்டர் மேயராக புகழ்பெற்றவர். அவரது தலைமையில் தொழிற்கட்சி புதிய உத்வேகத்துடன் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், பொதுமக்களும் இந்த புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!