உக்ரைன்-ரஷ்யா போர் 2022-ல தொடங்கி மூணு வருஷத்துக்கு மேல இழுத்துக்கிட்டு இருக்கு. இந்தப் போர் உலக அரசியல் மேடையில பெரிய புயலை கிளப்பியிருக்கு. ரஷ்யா இந்தப் போரை ஆரம்பிச்ச பிறகு, அமெரிக்கா-ரஷ்யா உறவு கடுமையா பாதிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் காலத்துல அமெரிக்கா உக்ரைனுக்கு முழு ஆதரவு கொடுத்து, ரஷ்யா மேல பொருளாதாரத் தடைகளை விதிச்சு, புடினை பந்தாடினாரு. ஆனா, 2025-ல டொனால்டு டிரம்ப் ரெண்டாவது தடவையா அதிபரான பிறகு, காட்சிகள் மாறி, போரை முடிவுக்கு கொண்டு வர புடின்கிட்ட அடிக்கடி போன்ல பேசி, மத்தியஸ்தம் செய்ய முயற்சி செஞ்சாரு.
இதோட தொடர்ச்சியா, ஆகஸ்ட் 15, 2025-ல அமெரிக்காவோட அலாஸ்கா மாகாணத்துல ஆங்கரேஜ்ல இருக்குற எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் ராணுவ தளத்துல டிரம்பும் புடினும் நேரடியா சந்திச்சு பேசினாங்க. புடின் விமானத்துல வந்து இறங்கினப்போ, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. டிரம்ப் புன்னகையோட கைகுலுக்கி, உற்சாகமா வரவேற்றாரு.
இதையும் படிங்க: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரியா? இந்தியாவுக்கு குட்நியூஸ் சொன்ன ட்ரம்ப்..
ரெண்டு பேரும் ரன்வேல இருந்து சிரிச்சு பேசிக்கிட்டே வெளிய வந்து, பத்திரிகையாளர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாங்க. ஆனா, அந்த சமயத்துல ஒரு திடீர் இடிச்சத்தம் வானத்துல கேட்டு, எல்லாரையும் திரும்பி பார்க்க வச்சது. புடினும் ஒரு கணம் திடுக்கிட்டு, சத்தம் வந்த திசைய பார்த்தாரு.
வானத்துல உலகிலேயே சக்தி வாய்ந்த B-2 பாம்பர் போர் விமானங்கள் சீறி பறந்து, அங்க இருந்தவங்களுக்கு ஒரு மறக்க முடியாத காட்சியை கொடுத்தது. டிரம்ப் உடனே மேல பார்த்து கைதட்டி, “இது நம்ம வரவேற்பு”னு புடின்கிட்ட சொன்னாரு. புடினும் பதிலுக்கு நன்றி சொல்லி சிரிச்சாரு.

இந்த B-2 பாம்பர்கள் எந்த அளவு பவர் உள்ளவைன்னா, இவை ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், பங்கர் பஸ்டர் குண்டுகள் மாதிரியான சக்தி வாய்ந்த ஆயுதங்களை சுமந்து, 11,112 கிமீ தூரம் எரிபொருள் நிரப்பாம பறந்து, 18,144 கிலோ வெடிபொருட்களை கொட்டி தாக்குது.
எதிரி ரேடார்களை ஏமாத்தி, உலகத்தோட எந்த மூலையையும் தாக்குற வல்லமை இதுக்கு உண்டு. இஸ்ரேல்-ஈரான் போரின்போது, அமெரிக்கா இந்த B-2 பாம்பர்களை பயன்படுத்தி, ஈரானோட ஃபோர்டோ அணு ஆயுத ஆலை மேல 6 பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி, பாதாளத்துல இருந்த அந்த ஆலையை தரைமட்டமாக்கியது உலக அளவுல பரபரப்பா பேசப்பட்டது. இந்த சந்தர்ப்பத்துல, புடினுக்கு வரவேற்பு கொடுக்கவும், அமெரிக்காவோட பவர் காட்டவும் இந்த விமானங்களை பறக்க விட்டதா நிபுணர்கள் சொல்றாங்க.
ஆனா, இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அமைதியான மூடுல இல்ல. பத்திரிகையாளர்கள் கூட்டத்துல இருந்து ஒரு பெண் ரிப்போர்ட்டர், “புடின், அப்பாவி மக்களை கொல்றதை நிறுத்துவீங்களா? போரை முடிவுக்கு கொண்டு வருவீங்களா?”னு கேள்வி கேட்டாங்க. புடின், “என்ன சொல்றீங்க? கேட்கல”னு மாதிரி ஒரு ரியாக்ஷன் கொடுத்து, கேள்வியை சாமர்த்தியமா தவிர்த்தது பரபரப்பை கிளப்பியது.
இந்த சந்திப்பு மூணு மணி நேரம் நடந்தது. புடின், “இந்த பேச்சுவார்த்தை உக்ரைன்ல அமைதியை கொண்டு வரும்னு நம்புறேன். அடுத்து மாஸ்கோவுல இன்னொரு சந்திப்பு நடத்தலாம்னு இருக்கோம்”னு சொன்னாரு. டிரம்போ, “ஜெலன்ஸ்கியோட பேச்சுவார்த்தைக்கு இது ஒரு தொடக்கம். உக்ரைனோட முடிவுதான் முக்கியம்”னு குறிப்பிட்டாரு.
இந்த சந்திப்பு ஒரு முக்கியமான தொடக்கமா இருந்தாலும், உறுதியான ஒப்பந்தம் எதுவும் இன்னும் ஏற்படல. உக்ரைனோட அதிபர் ஜெலன்ஸ்கி இந்த சந்திப்புல இல்லாதது, உக்ரைனுக்கும் அதோட நேட்டோ கூட்டாளிகளுக்கும் கவலையை கொடுத்திருக்கு. அடுத்து மாஸ்கோவுல நடக்கப்போற பேச்சுவார்த்தை இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டு வருமான்னு உலகமே கவனமா பார்த்துட்டு இருக்கு.
இதையும் படிங்க: ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா!! சப்தமே இல்லாமல் ட்ரம்புக்கு கல்தா!!