அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடையே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் பரஸ்பர விரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பிற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன.

நிலைமை இவ்வாறாக இருக்க சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தாம் தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறி வருகிறார். இதனை இந்தியா மறுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரபு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றார். அங்கு ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இதையும் படிங்க: இந்தியா மீதான வன்மத்தை கக்கிய டிரம்ப்.. ஆப்பிள் நிறுவன தலைவருக்கு பறந்த வார்னிங்!!

இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் துருக்கி பேச்சுவார்த்தையை திடீரென புதின் புறக்கணித்தார். தனக்கு பதில் உதவியாளர்கள் குழுவினை புதின் அனுப்பி வைத்தார். இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார். அரபு நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்ட டிரம்பிடம் இதுக்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ரஷ்ய அதிபர் புதின் துருக்கி செல்லாமல் போனது எனக்கு வியப்பாக இல்லை.

நான் இல்லாவிட்டால் அவர் அங்கு செல்ல மாட்டார். ரஷ்யா-உக்ரைன் போரால் வாரத்துக்கு 5 ஆயிரம் இளம் வயதினர் பலியாகி கொண்டிருக்கிறார்கள். எனவே, நாங்கள் போரை நிறுத்தப் போகிறோம். அங்கு போரை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இதைச்செய்ய இதுதான் சரியான நேரம் என்று நான் கருதுகிறேன். எனவே, விரைவில் புதினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவேன். என் மகள் டிபானிக்கு முதலாவது குழந்தை பிறந்துள்ளது. அழகான பேரனை பார்க்க இங்கிருந்து அமெரிக்கா செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!