இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்க குடிமக்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

"பாகிஸ்தானில் இந்தியா நடத்திய இராணுவத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் எங்களுக்குத் தெரியும். இது தொடர்ந்து வளர்ந்து வரும் சூழ்நிலையாகவே உள்ளது, மேலும் நாங்கள் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.'

பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்க குடிமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பதற்றம் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எங்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், மோதல்கள் நிறைந்த பகுதியில் சிக்கியுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் வெளியேற வேண்டுமென அமெரிக்க தூதரகம் செய்தி அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ‘ஆபரேஷன் சிந்தூர்’: நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் கூறியது என்ன?
இதையும் படிங்க: சக்ஸஸான "ஆபரேஷன் சிந்தூர்".. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி..!