நாட்டையே உலுக்கிய காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமானப்படை தளங்களை ஏவுகணை வீசி இந்தியா துல்லியமாக தகர்த்தது.
இந்தியாவின் மரண அடியை தாங்க முடியாமல், போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது பாகிஸ்தான். இதையடுத்தே இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் வந்தது.
ஆனால் இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என்று போகும் இடமெல்லாம் டிரம்ப் முழங்கி வருகிறார். ஜி7 மாநாட்டுக்கு சென்றிருந்த மோடி, டிரம்பிடம் போனில் பேசினார்.
அமெரிக்கா போரை நிறுத்தவில்லை; பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் விட்டோம் என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் டிரம்புக்கு உறைக்கும் படி மோடி சொல்லி விட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு அளித்த பேட்டியில் கூட நான் தான் இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று அடாவடி காட்டினார்.
இதையும் படிங்க: சீன அதிபர் ஜி ஜின்பிங் காணவில்லை!! இந்தியாவுக்கு ஆபத்து! உடல்நிலை சரிந்ததா? சகாப்தம் முடிந்ததா?

இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை போர் நிறுதத்துக்கு உரிமை கொண்டாடி விட்டார். அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காகவே டிரம்ப் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று பல அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். வெள்ளை மாளிகையில் நடந்த டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சந்திப்பு இந்த கூற்றை உறுதி செய்தது.
டிரம்ப் கொடுத்த விருந்தை ருசித்த அசிம் முனீர், டிரம்ப் தான் போரை நிறுத்தினார்; அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றார். முனீர் நாடு திரும்பியதும் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பே வந்து விட்டது. 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு வழங்க வேண்டும் என்று முதல் நாடாக பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது..

இதனிடையே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவில்லை என ட்ரம்ப் பொங்கினார். காங்கோ, ருவாண்டா இடையே பல தலைமுறையாக சண்டை நடக்கிறது. கொத்து கொத்தாக மரணங்கள் நேர்கிறது. இந்த போரை முடிக்க நானும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் அற்புதமான ஒப்பந்தத்தை தயார் செய்துள்ளோம். இதற்காக காங்கோ, ருவாண்டா பிரதிநிதிகள் ஷாஷிங்டன் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட உள்ளனர். இது ஆப்ரிக்க கண்டத்துக்கும் ஏன் மொத்த உலகத்துக்குமே ஒரு நல்ல நாள்.
ஆனால் இதற்காக எல்லாம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியா, பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். அதற்கும் அமைதிக்கான நோபல் பரிசு தரமாட்டார்கள். செர்பியா, கொசோவோ போரை நிறுத்தியதற்கும் நோபல் பரிசு கிடைக்காது. எகிப்து, எத்தியோபா இடையே அமைதியை கொண்டு வந்ததற்காகவும் நோபல் பரிசு தரமாட்டார்கள்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட ஒப்பந்தம் கொண்டு வந்ததற்கும் நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உட்பட நான் எந்த போரை நிறுத்தினாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்த விஷயத்தில் என்ன நடந்தாலும் எனக்கு பரவாயில்லை. நான் என்ன செய்கிறேன் என்று உலக மக்களுக்கு நன்றாக தெரியும். எனக்கு அது போதும் என டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது டிரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை வழங்கினார். 'நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. அதிபர் டிரம்ப் அதைப் பெற வேண்டும்' என்று நெதன்யாகு கூறினார். குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.
இதையும் படிங்க: பிரிக்ஸ் நாடுகளை பழிவாங்கும் அமெரிக்கா! ட்ரம்ப் ஆட்டத்திற்கு சீனா கொடுத்த பதிலடி!!