உலக அரங்குல பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், அமெரிக்க 47-வது அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 15, 2025-ல அலாஸ்காவுல உள்ள ஜாயின்ட் பேஸ் எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன்ல நடந்தது. கிட்டத்தட்ட மூணு மணி நேரம் நீடிச்ச இந்த பேச்சுவார்த்தை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர்றதுக்கு முக்கியமானதா இருக்கும்னு உலக நாடுகள் எதிர்பார்த்திருந்தாங்க.
ஆனா, இந்த சந்திப்புல எந்த முக்கிய முடிவும் எட்டப்படல. இருந்தாலும், விரைவுல இன்னொரு சந்திப்பு நடக்கும்னு ட்ரம்பும் புடினும் அறிவிச்சிருக்காங்க. இந்த சந்திப்பு, உக்ரைன் போர் முடிவுக்கு வர ஒரு முக்கியமான முயற்சியா பார்க்கப்பட்டாலும், உடனடி முடிவு இல்லாததால பலருக்கு ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கு.
இந்த சந்திப்பு நடந்த சூழல்ல, ஒரு அதிர்ச்சியான கருத்தை முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனோட மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் சொல்லியிருக்காங்க. ட்ரம்போட பெயரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்யத் தயார்னு அவர் அறிவிச்சிருக்காங்க, ஆனா ஒரு நிபந்தனையோட! “ட்ரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்தா, நானே அவரோட பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன்.
இதையும் படிங்க: ட்ரம்ப் வரியால் வர்த்தகமே போச்சு.. மொத்தமும் க்ளோஸ்.. மீட்டெடுங்க மோடி.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்..!
இந்த அலாஸ்கா பேச்சுவார்த்தை, போரை முடிவுக்கு கொண்டு வர சரியான தருணம். அங்க ஒரு குண்டு வெடிக்குற சத்தம் கூட கேட்கக் கூடாது. புடினுக்கு இந்த விவகாரத்துல எந்த முக்கியத்துவமும் கிடைக்கக் கூடாது”னு ஹிலாரி திட்டவட்டமா சொல்லியிருக்காங்க. இது அரசியல் வட்டாரத்துல பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கு, ஏன்னா ஹிலாரியும் ட்ரம்பும் எப்பவுமே எதிரெதிர் துருவங்களா இருந்தவங்க.
இந்த பேச்சுவார்த்தை அலாஸ்காவுல நடந்தது, பல காரணங்களால முக்கியமானது. முதலாவதா, புடின் 2022-ல உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கின பிறகு, மேற்கத்திய நாட்டுக்கு முதல் தடவையா வர்றது இது. அலாஸ்கா, ஒரு காலத்துல ரஷ்யாவோட பகுதியா இருந்ததால, இந்த இடம் சின்னமாகவும் பார்க்கப்படுது.

ட்ரம்பும் புடினும் ஒரே கார்ல (ட்ரம்போட ‘தி பீஸ்ட்’ லிமோசின்) பயணிச்சது, இரு தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை காட்டுது. ஆனா, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இந்த சந்திப்புக்கு அழைக்கப்படாதது, உக்ரைனுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கு. “எங்களை விட்டுட்டு எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது”னு செலன்ஸ்கி திரும்பத் திரும்ப சொல்லியிருக்காரு.
இந்த பேச்சுவார்த்தையோட முக்கிய நோக்கம், உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு முடிவு காணுறது. ட்ரம்ப், “போர் நிறுத்தம் இல்லேன்னா, பேச்சுவார்த்தையே வேண்டாம்”னு கடுமையான நிலைப்பாடு எடுத்திருந்தார். ஆனா, புடின், கிரிமியாவையும், உக்ரைனோட நாலு மாகாணங்களையும் ரஷ்யாவுக்கு சொந்தம்னு அங்கீகரிக்கணும்னு கோரிக்கை வைச்சிருக்காரு.
இது உக்ரைனுக்கு ஏத்துக்க முடியாத நிபந்தனை. இதனால, இந்த சந்திப்புல எந்த உடன்பாடும் ஏற்படல. ட்ரம்ப், “இன்னும் சில புள்ளிகள்ல உடன்பாடு ஏற்படணும், ஆனா நல்ல முன்னேற்றம் இருக்கு”னு சொல்லியிருக்காரு. புடினும், “அமைதிக்கான பாதையை திறந்திருக்கோம்”னு நம்பிக்கையோட பேசியிருக்காரு.
ஹிலாரியோட இந்த கருத்து, ட்ரம்புக்கு அரசியல் ரீதியா ஒரு பெரிய ஆதரவா பார்க்கப்படுது, ஆனா அதே நேரத்துல, புடினுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு அவர் வைக்குற நிபந்தனை, இந்த பேச்சுவார்த்தையோட சிக்கல்களை காட்டுது. அடுத்த சந்திப்பு, உக்ரைனையும் உள்ளடக்கி நடந்தா, ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு.
இதையும் படிங்க: B2 Bombers fly!! தலைக்கு மேல் பறந்த போர் விமானங்கள்!! ட்ரம்ப் வரவேற்பால் ஷாக்கான புடின்..