ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. கொலை வழக்கில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை குறைக்க ஏமன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய கிராண்ட் முஃப்தி அலுவலகம் வெளியிட்டுள்ளது
ஜூலை 16 ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அது ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிருந்து, ஏமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை தீர்க்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்திய கிராண்ட் முஃப்தியின் வேண்டுகோளின் பேரில், சூஃபி மூத்த ஷேக் ஹபீப், சன்னி தலைவர் அபு பக்கர் ஏமன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைளுக்கு பலனளிக்கும் விதமாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை குறைக்க ஏமன் ஒப்புக்கொண்டதாக முஃப்தி அலுவலகம் அறிவித்துள்ளது.
முஃப்தி அலுவலகத்தின் அறிக்கையை ஏமனில் உள்ள நீதிக்கான நடவடிக்கை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தலால் உறுதிப்படுத்தியுள்ளார். உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட மதத் தலைவர்களின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளால் மரண தண்டனை குறைக்கப்பட்டதாகத் தெரிகிறது. நிமிஷா பிரியா குறைக்கப்பட்ட மரண தண்டனையுடன் விடுவிக்கப்படுவாரா அல்லது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட ஏமன் குடிமகன் மஹ்தியின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பிறகு அடுத்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் உச்சக்கட்ட பதற்றம்... நியூயார்க் நகரில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் உட்பட 4 பேர் பலி...!
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார். நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பிறகு, அவர் நிமிஷாவைத் துன்புறுத்தத் தொடங்கினார். மேலும் அவரிடம் இருந்த பாஸ்போர்ட், பணம், நகையையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரிடம் இருந்து தப்பி இந்தியா திரும்ப நினைத்த நிமிஷா, மற்றொரு நபரும் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தபோது, மருந்தின் அளவு அதிகமாக இருந்ததால் அவர் இறந்தார். இந்த வழக்கில், ஏமன் அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கில் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றன.
இதையும் படிங்க: “மனுஷங்களாடா நீங்க எல்லாம்...” - அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறைக்குள் மலம் கழித்த மர்ம நபர்கள்...!