புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிக அளவிலான சுற்றலா பயணிகள் வருவது வழக்கமாக இருக்கிறது. தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள 5க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் பிரபலமான ஒன்றான சின்ன வீரம்பட்டினம் கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி நீல கடற்கரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் சுற்றுலாவுக்காக பாண்டிச்சேரி வந்துள்ளனர். அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீர் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட அலைகளில் சிக்கி 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பகுதியில் ஏற்கனவே பலமுறை விபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், அங்க வந்து பாதுகாப்பு பணிகளில் யாரும் ஈடுபடவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக உடல்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இது குறித்து அலியங்குப்பம் காவல் நிலையத்தில விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை.? திருவல்லிக்கேணி போலீசார் ஆக்சன்..
இதையும் படிங்க: இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக.. கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!